உணவு / சமையல்

காசி அல்வா

கல்கி

மகாலட்சுமி சுப்பிரமணியன், புதுச்சேரி.

தேவையானவை:

துருவிய வெள்ளை பூசணிக்காய்-1கப்,

சர்க்கரை-1/2 கப்,

ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்,

முந்திரி-1/4 கப்,

பச்சைகற்பூரம்-1சிட்டிகை,

ஆரஞ்சு ஃபுட்கலர்-1சிட்டிகை

நெய்-1/4 கப்.

செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரிப் பருப்பை வறுக்கவும்.பின் பூசணிக்காய் துருவலையும் போட்டு வறுக்கவும்.நன்கு வதக்கவும். பின் சர்க்கரை, ஃபுட்கலர் சேர்த்து கலந்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நெய் சேர்த்து பளபளப்பானதும் முந்திரி, ச்சைக் கற்பூரம்,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும் பின்னர் இறக்கி நெய் தடவிய தட்டில் இட்டு ஆறியதும் துண்டுகள் போடவும்.

பண்டைய ரோமானியர்கள் சிறுநீரை இதற்கெல்லாமா பயன்படுத்தினார்கள்?

கோடை காலத்திற்கான (அக்னி நட்சத்திரம்) ஆரோக்கிய குறிப்புகள்!

உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!

சிறுகதை; தென்னை மரமும், வாழை மரமும்!

தயக்கம் இருக்க வேண்டியது எதில் தெரியுமா?

SCROLL FOR NEXT