தேவையானவை: காராபூந்தி - ஒரு கப், கெட்டி தயிர் - ஒன்றரை கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, தயிருடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் காராபூந்தி சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: அப்பளம் - 10, காய்கறி பொரியல் - 50 கிராம், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி, கோன் வடிவத்தில் செய்யவும். இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டிவிடவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
தேவையானவை: அப்பளம் - 10, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு பொரியல், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து, தனியே வைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு பொரியலை சேர்த்துக் கிளறவும். பொரித்த அப்பளத்தை கைகளினால் நொறுக்கி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையானவை: புலாவ் (அ) பிரியாணி - ஒரு பவுல், எள் - 3 டேபிள்ஸ்பூன், வறுத்த ரவை, சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புலாவ் (அ) பிரியாணியில் உள்ள கிராம்பு, பிரிஞ்சி இலைகளை எடுத்துவிட்டு, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் ரவையைப் போட்டு மிருதுவாகும் வரை கிளறவும். இதனுடன் அரைத்த புலாவ் கலவை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், சோள மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
தேவையானவை: காய்கறிகள் (சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டாக எஞ்சுபவை) - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் - ஒரு பவுல், கோதுமை மாவு - 50 கிராம், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை தடிமனான சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.