rainy season Image credit - pixabay
உணவு / சமையல்

மழைக்காலத்தில் மசாலாக்கள் கெட்டுப் போகாமல் இருக்க எளிய டிப்ஸ்!

ம.வசந்தி

ழைக்காலம் வந்து விட்டாலே மளிகைப் பொருட்களை பாதுகாப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மிகவும் அவசியமாகும். அதில் மிக முக்கியமான ஒன்று மசாலா பொடிகளை பாதுகாப்பது. அந்த வகையில்  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவற்றில் ஈரப்பதம் ஏற்படுவதை சுலபமாக தடுத்து, நீண்ட நாள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. காற்று புகாத கொள்கலன்கள்

மழைக்காலத்தில் மசாலாக்களை பாதுகாப்பதற்கு காற்று புகாத கண்ணாடி கொள்கலனை பயன்படுத்த வேண்டும். கண்ணாடி கொள்கலன்கள் ஈரத்தை தடுப்பதோடு கண்ணாடி ஜாடியில் மசாலாக்கள் மற்றும் சர்க்கரையை சேமிக்க அவை எப்போதும் பிரஷ்ஷாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் .

2. ஈரமான இடங்களை தவிர்க்க வேண்டும்

மழைக்காலத்தில் ஜன்னல், சிங்க், அடுப்பு போன்ற இடங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மசாலா மற்றும் சர்க்கரையை ஒருபோதும் அவ்வகை ஈரமான இடங்களில் வைப்பதை தவிர்ப்பதோடு சமையலறையில் சூரிய ஒளி படும் இடத்திலும் தவிர்ப்பதோடு குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடங்களில் மசாலாக்களை வைக்க அவை கெட்டிப்படாமல் இருக்கும்.

3. சின்னதாக பயன்படுத்துங்கள்

மழைக்காலம் வருகிறது என்றாலே மசாலா பாக்கெட்டுகளை பெரிதாக வாங்குவதற்கு பதில் அளவான சிறிய பாக்கெட்டுகளை வாங்கி அவ்வப்போது பயன்படுத்துவதால் ஈரப்பதமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

4. ஸ்பூன்கள் பயன்படுத்துங்கள்

மழைக்காலத்தில் மசாலாக்களில் ஈரப்பதத்தை தடுக்க ஒவ்வொரு மசாலா பொருட்களுக்கும் தனித்தனியாக ஸ்பூன்களை பயன்படுத்த வேண்டும். இதனால் ஒரு பொருளுடன் மற்றொரு பொருள் கலப்பது தடுக்கப்படுவதோடு ஈரப்பத பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதோடு மசாலா பொருட்களை எடுக்கும்போது உலர்ந்த கைகளுடன் எடுக்க வேண்டும்.

5. அவ்வப்போது பரிசோதிக்கவும்

மழைக்காலத்தில் சர்க்கரை மற்றும் மசாலா பொருட்களில் ஈரப்பதம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மசாலா பொருட்களின் வாசனை வேறு விதமாக வந்தாலோ அல்லது கட்டிப் பட்டாலோ அதில் ஈரப்பதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளை கையாள வேண்டும்.

எதிர்வரும் காலம் வடகிழக்கு பருவமழை காலம். ஆதலால் மசாலா பொருட்களை மேற்கொண்ட வழிமுறைகளின் மூலம் பாதுகாத்து பயன் பெறுங்கள்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT