சுண்டல் மசாலா
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
சுண்டல் 3 கப்
தேங்காய் துருவல் அரை கப்
வறுத்து அரைக்க
கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கறி வேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
செய்முறை :
சுண்டலையை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்ளவும். பின்பு அவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த சுண்டல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் பொடியாக்கிய மசாலா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். சுவையான சுண்டல் மசாலா ரெடி!
சுண்டல் சாதம்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
பாசுமதி அரிசி 1 கப்
சுண்டல் 2 கப்
குடை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
சாட் மசாலா 1 டீஸ்பூன்
நெய் 1 டீஸ்பூன்
பிரியாணி இலை 1
தேங்காய்ப் பால் 2 கப்
உலர்ந்த வெந்தய இலை ஒரு கைப்பிடி
தக்காளி 4
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
வெங்காயம் 3
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
வதக்கி அரைக்க :
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு பல் - 8
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 8
செய்முறை :
சுண்டலை 10 மணி நேரம் ஊறவைத்து உப்புப் போட்டு வேகவைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிரியாணி இலை, குடைமிளகாய், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அரிசியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். பிறகு ஈரம் போகும் வரை நெய்யில் அரிசியை வறுக்கவும். வறுத்த அரிசியில் தேங்காய்ப்பால் விட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வேகவைத்த சுண்டலை, வதக்கிய குடமிளகாய் மசாலா, வெந்தய இலை, சாட் மசாலா சேர்த்து லேசாகக் கொதித்ததும், குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சுடச் சுடப் பரிமாறவும்.