உணவு / சமையல்

பொருள் ஒண்ணு; வெரைட்டி ஆறு!

மங்கையர் மலர்

மாலையில் விளையாடிவிட்டு அசந்துபோய் வரும் குழந்தைகளுக்கு சத்தாகவும், சுவையாகவும் என்ன செய்யறதுன்னு யோசிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு இருக்கீங்களா? இந்த மிக்ஸட் வெஜிடபிள் கலவையை செய்து வைத்துக்கொள்ளுங்கள். நொடியில் டிபனை செய்து அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்: கேரட் – 2 (பொடியாக நறுக்கியது), பீன்ஸ் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது), பட்டாணி – 1 கப் (ஊற வைத்து முளைகட்டியது), வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கியது) – 1 கப், மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன், கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு முதலில் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் மற்ற காய்கறிகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். காரத்திற்கு வேண்டுமானால், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இறக்கும்போது கரம் மசாலா பொடி ஒரு ஸ்பூன் தூவி, சிறிது வெண்ணெயை சேர்த்து இறக்கவும். இப்ப மிக்ஸட் வெஜிடபிள் கலவை ரெடி!

வெரைட்டி – 1 பாவ் பாஜி:

ன்னை இரண்டாக வெட்டி, தவாவில் சிறிது வெண்ணெய் போட்டு அதில் ரோஸ்ட் செய்யவும். பின்னர் வெஜிடபிள் கலவையை நடுவில் வைத்து சர்வ் செய்தால் பாவ் பாஜி ரெடி!

வெரைட்டி -2 போண்டா:

டலை மாவுடன் சிறிது காரம், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்து, அதில் வெஜிடபிள் கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தால் போண்டா ரெடி!

வெரைட்டி – 3 சான்ட்விச்     

தே கலவையை ரெண்டு பிரட் ஸ்லைடுகளுக்கு இடையே வைத்து வெண்ணெய் தடவி பிரட் டோஸ்ட்டரிலோ தவாவிலோ ரோஸ்ட் செய்து எடுத்தால் சூப்பர் சான்ட்விச் ரெடி!

வெரைட்டி – 4 ஃப்ரைட்ரைஸ்:

சாதத்தை உதிரியாக வடித்து இதே கலவையைக் கலந்து கடாயில் வைத்து சூடாக்கினால் ஃப்ரைட்ரைஸ் ரெடி! ஸைட் டிஷ்க்கு வெங்காய ரெய்தா சூப்பராக இருக்கும்.

வெரைட்டி – 5 சமோசா:

மோசா ஷீட்கள் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. அதை வாங்கி இந்தக் கலவையை வைத்து முக்கோண வடிவில் மடித்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சமோசா ரெடி!

வெரைட்டி – 6 குருமா:  

வெஜிடபிள் கலவையுடன் சிறிது தேங்காயப் பாலை விட்டு கசகசாவை அரைத்துப் போட்டு குருமாவாகப் பண்ணலாம். கூடவே சப்பாத்தியோ, பராத்தாவோ செய்து அசத்தலாம்!

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT