உணவு / சமையல்

தொப்பை சட்னி

கல்கி

தேவை:
சிவப்பு பூசணி(தோலுடன் கூடிய சதைப் பகுதி ,பிஞ்சு புடலங்காய் சதையுடன் கூடியவிதை ப்பகுதி,பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப்பகுதி,சேனைக்கிழங்கின் தோல் நீக்கிய சதைப்பகுதிஎல்லாம் சேர்த்து-2 கப்,
கடலைப்பருப்பு-3டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, தனியாதலா இரண்டு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-5,
புளி,உப்பு, கறிவேப்பிலைதேவைக்கு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தனியா, மிளகாய், க பருப்பு, உ பருப்பை தனித்தனியே வறுக்கவும்..காய்களின் தோல் பகுதிகளை நன்கு வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி காய்களை சேர்த்து அரைக்கவும். சட்னி கணீசமாக அதிகம் தேவையென்றால் காய் வதக்கும் போது தேங்காய் சேர்த்து அரைக்கவும். இதை,எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT