Ukkarai recipe
Ukkarai recipe 
உணவு / சமையல்

பாரம்பரியமிக்க உக்காரை - செய்வது எப்படி!

கல்கி டெஸ்க்

செய்முறை:

டலைப் பருப்பு, பாசிப்பருப்பு  இரண்டையும் நன்றாக சிவக்க வறுத்து, கொதிக்கும் வெண்ணீரில் 1 மணி நேரம் வரை  ஊற வைக்கவும். பின் இதிலுள்ள  தண்ணீர் முழுவதையும் ஒட்ட வடித்து விட்டு   மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும். அரைத்த விழுதை இட்லித்தட்டில் போட்டு ஆவியில் வேக வைக்கவும். வெந்த பின் ஆற வைத்து மிக்ஸியில் மறுபடியும் உதிரியாக அரைக்கவும். பின் அடுப்பில் பாத்திரம் வைத்து கொஞ்சம் சூடானதும், துருவிய வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டவும். இக்கரைசலை   வாணலியில் ஊற்றி பாகு  காய்ச்சவும். பாகு கம்பி பதம் வந்ததும் உதிரியாக அரைத்த விழுதை போட்டு உப்புமா போல் கிளறி ஏலப்பொடி, முந்திரி பருப்பு, தேங்காய் துருவல், நெய் ஊற்றி நன்றாக  கலந்தால் சுவையான, ஆரோக்கியமான "உக்காரை" ரெடி.

குறிப்பு:

ந்த உக்காரை ஸ்வீட் மதுரை, திருநெல்வேலி ஊர்களில் பாரம்பரிய தீபாவளி பலகாரமாகும். இதில் புரதம் நிறைந்த கடலைப் பருப்பும், பாசிப்பருப்பும், இரும்புச்சத்து நிறைந்த வெல்லமும் சேர்த்திருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக் கொண்டு செய்து பார்த்து ரசித்து, ருசித்து குடும்பத்துடன் சாப்பிட வேண்டிய  "ஸ்வீட்’’.

-நளினி ராமச்சந்திரன், கோவை.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT