பலாப்பழ பணியாரம் 
உணவு / சமையல்

பலாப்பழம் வைத்து சுவையான இரண்டு வகை ஸ்வீட்!

கலைமதி சிவகுரு

பலாப்பழ பணியாரம்

தேவையான பொருட்கள்:

பலாப்பழ சுளை _15, வெல்லத் தூள் _11/2 கப், கோதுமை மாவு_4 ஸ்பூன், அரிசி மாவு,  பால், ரவை தலா _2 ஸ்பூன், சுக்கு தூள்_1 ஸ்பூன், ஏலக்காய் தூள்_1/2 ஸ்பூன், நெய்_5 ஸ்பூன், தேங்காய் _1/4 மூடி, உப்பு_1 சிட்டிகை, சோடா உப்பு_1/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பலாசுளைகளை சிறிதாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். பின்னர் தேங் காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைத்ததும் வடிகட்டி கொள்ளவும்.

அதன் பிறகு வாணலியை அடுப்பில் வைத்து 1ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்து கலர் மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே வாணலியில் நைசாக அரைத்து வைத்த பலாபழக் கலவையை ஊற்றி சிறு தீயில் வைத்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க வைத்து சிறிது கெட்டியாக வரும் வரை கிளறவும். பிறகு இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.

நன்றாக ஆறிய பின் இதில் சுக்கு மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து அத்துடன் கோதுமை மாவு, அரிசி மாவு ரவை இவற்றையும் சேர்த்து 1பிஞ்ச் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை கெட்டியாக இருந்தால் 2 ஸ்பூன் காய்ச்சி ஆறிய பால் சேர்த்து மாவை பணியாரம் சுட பக்குவமாக ஆக்க வேண்டும்.

பின்னர் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் நெய் தடவி மாவை ஊற்றி அடுப்பை சிறு தீயில் எரிய விடவும். பணியாரம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதை குழந்தைகளும் விரும்பி சாப் பிடுவார்கள்.

பலாப்பழ பர்ஃபி

தேவையான பொருட்கள்:

பலாச்சுழை_ 20,தேங்காய்_1, வெல்லம்_250 கிராம், நெய்_2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் பலாப்பழ சுளைகளை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வெல்லம் கரைத்ததும் வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவா எடுத்து அதில் தேங்காயை துருவி போட்டு அடுப்பில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அத்துடன் அரைத்து வைத்த பழக்கலவையை சேர்த்து கை விடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும். தீயை மிதமாக எரியவிடவும். பிறகு வடிகட்டி வைத்த வெல்லக் கரைசலை கொஞ்சம் சேர்த்து நன்கு கிண்டி கொண்டே இருக்க வேண்டும். பின் இனிப்பு சரிபார்த்து வேண்டும் என்றால் மீதி இருக்கும் கரைசலை சேர்த்து கொள்ளவும். கலவை கெட்டியாகி வரும் வரை கை விடாமல் கிண்ட வேண்டும். 15 நிமிடத்திற்கு மேல் கிண்டும்போது சுருண்டு வரும். அப்போது அது வெந்து வரும்.

உடனே ஒரு தாம்பாளத்தில் நெய் தடவி இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி சிறிது மேலே நெய் தடவி துண்டு களாக (ஃபர்பிகளாக) வெட்டி கொள்ளவும். ஒவ்வொரு துண்டின் மேலும் பலா சுளையை சிறு சதுர துண்டு களாக வெட்டிவைத்து அழகுபடுத்தலாம். மிகவும் சுவையான ஃபர்பி ரெடி

பலாப்பழம் கிடைக்கும்போது வித்தியாசமான முறையில் ஸ்வீட் செய்து அசத்தலாம்.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT