ரோஜாப்பூ மில்க்க்ஷேக் 
உணவு / சமையல்

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ரோஜாப்பூ மில்க்க்ஷேக் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ரோஜாப்பூ அழகுக்காக மட்டும் பயன்படுத்தியதை தாண்டி இப்போது உணவுப் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ரோஜாப்பூ இதழ் நம் உடலில் உள்ள கோலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துவதால், சருமத்திற்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லதாகும். அத்தகைய பயன் மிகுந்த பன்னீர் ரோஜாவை வைத்து மில்க்க்ஷேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஜா- 2கப்.

தேங்காய் துருவல்-1 கப்.

தண்ணீர்-150ml.

பீட்ரூட் ஜூஸ் -1 தேக்கரண்டி.

பாதாம் பவுடர்-1 தேக்கரண்டி.

முந்திரி பவுடர்- 1 தேக்கரண்டி.

கடலை பவுடர்- 1 தேக்கரண்டி.

பனங்கல்கண்டு பவுடர்- 2 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்:

முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை 2கப் எடுத்து கொண்டு நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அத்துடன் துருவிய தேங்காய் பால் 1 கப், தண்ணீர் 150ml சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பிறகு அதை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பீட்ரூட் ஜூஸ் 1 தேக்கரண்டி, முந்திரி பவுடர் 1 தேக்கரண்டி, பாதாம் பவுடர் 1 தேக்கரண்டி, கடலை பவுடர் 1 தேக்கரண்டி, பனங்கல்கண்டு 2 தேக்கரண்டி சேர்த்து கலக்கவும். இப்போது இந்த ஜூஸை கண்ணாடி கிளேசில் மாற்றியதும் அதன் மீது ரோஜா இதழ்கள் தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சட்டுன்னு வீட்டிலேயே ரோஜாப்பூ இதழ் மில்க்க்ஷேக் செஞ்சுடலாம்.

கோடையை சமாளிக்க நீங்களும் வீட்டிலேயே செஞ்சு கொடுங்க சும்மா ஜில்லுனு இருக்கும்.

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

SCROLL FOR NEXT