உணவு / சமையல்

தினம் ஒரு சுண்டல்

கல்கி

பீச் சுண்டல்.

ஆதிரை வேணுகோபால்

தேவை:

வெள்ளை பட்டாணிகால் கப்

தேங்காய் மற்றும் மாங்காய் (பொடியாக நறுக்கிய அல்லது துருவியது) தலா ஒரு கப்

நறுக்கிய கொத்தமல்லிசிறிதளவு.

உப்பு தேவையான அளவு

கடுகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்.

வறுத்து அரைத்த பொடி – 2 டீஸ்பூன். (தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சம அளவு எடுத்து வறுத்து அரைத்து கொள்ளவும்).

செய்முறை:

பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் பட்டாணி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீரை வடிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த பட்டாணி, வறுத்து அரைத்த பொடி கிளறவும். அத்துடன் தேங்காய், மாங்காய் துருவல் ,கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். விருப்பமெனில் துருவிய வெள்ளரிக்காய் கேரட் கூட சேர்க்கலாம். அருமையான பீச் சுண்டல் தயார்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT