10 Foods That Increase Blood Oxygen Levels
10 Foods That Increase Blood Oxygen Levels https://manithan.com
வீடு / குடும்பம்

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் பத்து உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலினுள் சக்தியை உற்பத்தி செய்ய செல்களுக்குத் தேவை ஆக்சிஜன். இதை நாம் உள்ளிழுக்கும் காற்றிலிருந்து பிரித்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறது நுரையீரல். இரத்தத்தின் மூலம் செல்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு 95 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருப்பது அவசியம். அதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய பத்து அத்தியாவசியமான உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

* பசலை, காலே, சுவிஸ் சார்ட் போன்ற இலைக் கீரைகளை உண்ணும்போது அவற்றில் உள்ள அதிகளவு இரும்புச் சத்தானது ஆக்சிஜனை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதற்கு உதவி புரிகின்றன.

* பீட்ரூட்டில் உள்ள தேவையான அளவு நைட்ரேட்டானது இரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

* ப்ளாக் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வைக்கின்றன.

* சால்மன், காணாங்கெளுத்தி, ட்ரௌட் போன்ற ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை உண்பதும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.

* அவகோடா பழத்திலுள்ள பொட்டாஸியம் சத்து ஆக்சிஜனினை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.

* ஆரஞ்சு, லெமன் போன்ற வைட்டமின் C நிறைந்த சிட்ரஸ் வகைப் பழங்களும் நுரையீரல் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவி செய்வதால் உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது.

* வீக்கத்தைக் குறைக்கும் குணமுடைய பூண்டு மூச்சுப் பாதை ஆரோக்கியத்தை சீர்செய்து சிரமமின்றி ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவுகிறது.

* இஞ்சியிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்ரி குணமானது நுரையீரல் ஆரோக்கியத்துடன் வேலை செய்ய உதவுகிறது.

* மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்ரி குணங்களும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதிகளவு ஆக்சிஜன் உள் செல்ல வழி செய்கின்றன.

* பாதம், ஃபிளாக்ஸ், சியா போன்ற விதைகளில் உள்ள மக்னீசியம் சத்தும் நுரையீரலின் செயல்பாடுகள் சிறக்க உதவுகிறது.

மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை அடிக்கடி உட்கொண்டு நம் உயிருக்கு உத்திரவாதமளிக்கும் வாயுவான ஆக்சிஜனை குறைவின்றிப் பெற்று நிறைவான வாழ்வு பெறுவோம்.

புறநானூறு படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷா?

எல்லாவற்றிலும் உன்னை ஈடுபடுத்து, போராடு வெற்றி நிச்சயம்!

ட்ராபி வெல்வது இருக்கட்டும்… முதலில் பாகிஸ்தான் வருவீங்களா? - இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

துன்பத்தை வரவேற்போம்!

அரசின் ஓராண்டு சான்றிதழ் நாட்டுப்புறக் கலைப் பயிற்சி!

SCROLL FOR NEXT