Do you know the 10 qualities that boost your image?
Do you know the 10 qualities that boost your image? 
வீடு / குடும்பம்

உங்கள் இமேஜை உயர்த்தும் 10 குணங்கள் எவை தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ரு மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவனது குணங்களும் முக்கியம். ஒருவரது உயர்வும் தாழ்வும் அவர் குணத்திலேயே உள்ளது. திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது என்ன கேட்பார்கள்? ‘நல்ல குணமுள்ள பெண்ணா?’ என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்பார்கள். பெண் வீட்டார், ‘மாப்பிள்ளை நல்ல குணம் உள்ள பையனா?’ என்றுதான் கேட்பார்கள். வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அவரவர் குணமே.

அதிலும் ஒரு பத்து நல்ல குணங்கள் நமக்கு இருந்விட்டால் நம்மை மிஞ்ச ஆளே கிடையாது என்று கூடச் சொல்லலாம். அந்த பத்து குணங்கள் எவை எவையாக இருந்தால் நல்லது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. அடுத்தவரை நேசிக்கும் குணம்: இந்த குணம் பல பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

2. அடுத்தவரை மரியாதையாக நடத்தும் குணம்: இது பலருக்கு நல்ல எண்ணங்களை உண்டாக்குவதாகும்.

3. அடுத்தவரை அக்கறையுடன் பாதுகாத்திடும் குணம்: இந்த குணம் பின்னாளில் நமக்கு பல நன்மைகளை விளைவிக்கும்.

4. தனக்குள் பொறுமையை கடைபிடிக்கும் குணம்: இந்த குணம் மறுபிறவிக்கும் நமக்கு உதவும்.

5. தன்னைக் கட்டுப்படுத்தும் குணம்: இந்த குணம் பின்னாளில் நாம் மிகச் சிறந்த வீரனாக வாழ வழிவகுக்கும்.

6. அடுத்தவருக்கு பசியாற்றும் குணம்: இந்த குணம் இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை.

7. தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் குணம்: இது மனதளவிலும் உடலளவிலும் ஒருவருக்கு என்றும் நன்மை பயக்கும்.

8. விலங்குகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் குணம்: இந்த குணம் ஐந்தறிவு உள்ளவை அனைத்தும் உங்களை அதிகம் நேசிக்க வைக்கும்.

9. பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ளும் குணம்: இக்குணம் என்றும் நம்மிடையே சமத்துவத்தை கடைப்பிடிக்கும்.

10. அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கும் குணம்: இது தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள வழிவகுக்கும் குணமாகும்.

இதுவரை எப்படி இருந்தீர்களோ விட்டுவிடுங்கள். இனியாவது இந்த பத்து குணங்களைப் பின்பற்றக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் தானாக வசந்தம் வீசும். வெற்றிகள் குவியும். சமூகத்தில் உங்கள் இமேஜ் உயரும்.

பயணத்தின்போது அவசியம் நாம் கொண்டு செல்ல வேண்டியது!

கமல் vs மோகன்! ஒரே நாளில் வெளியாகும் இரு படங்கள்!

காஞ்சிக்கு அருகில் அமைந்த ஒரு அற்புதக் குடைவரை கோயில்!

Northern Lights: இயற்கையின் ஓர் அறிய(அதிசய) வானியல் நிகழ்வு! 

இந்த மாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் அவ்வளவு தான்! 

SCROLL FOR NEXT