Do you know what will happen if you stick safety pin on Thali kodi? https://news4tamil.com
வீடு / குடும்பம்

தாலிக்கொடியில் சேப்டி பின்னை கோர்த்து வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

திருமணத்தில் முக்கிய நிகழ்வாக தாலி அணிவிப்பது வழக்கம். கணவன், மனைவி பந்தத்தை உறுதிப்படுத்தும் தாலிக்கயிறு ஒன்பது இழைகளைக் கொண்டது. இந்த ஒன்பது இழைகளும் வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிப்பதாக நம்பப்படுகின்றது.

தாலிக்கொடி பொதுவாக மஞ்சள் கயிற்றில் அணியப்படுகிறது. கால மாற்றத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கச்சங்கிலியில் தாலியை அணிந்து கொள்கிறார்கள். மஞ்சள் கயிற்றில் அணிந்து கொள்வதை விட தங்க செயினில் அணிந்துகொள்வது பராமரிக்க எளிதாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.  மஞ்சள் கயிற்றில் அழுக்கு படிவதும், வியர்வை பட்டு கருத்து விடுவதும் முக்கியமான காரணம். இதனைத் தவிர்க்கவே தங்க செயினில் தாலி அணியப்படுகிறது.

மஞ்சள் கயிற்றில் தாலி அணிபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தாலிக்கயிற்றில் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு போக சிறிது ஷாம்பூ தேய்த்து தாலிக்கயிற்றை சுத்தம் செய்ய பளிச்சென்று ஆகிவிடும். பிறகு மஞ்சள் தூளில் சிறிது தண்ணீர் கலந்து குழைத்து கயிற்றில் தடவி விட, புது கருக்காக மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருக்கும்.

செயினில் தாலி அணிந்து இருப்பவர்கள் மஞ்சள் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளி, செவ்வாய் போன்ற விசேஷ நாட்களில் திருமாங்கல்யத்திற்கு சிறிது குங்குமம் வைத்து கும்பிடுவது நல்லது. கணவனின் ஆயுளை நீடிக்கவும், வாழ்வின் முன்னேற்றத்திற்கும் மாங்கல்ய வழிபாடு அவசியம் என்று கூறப்படுகிறது.

புனிதமாகப் போற்றப்படும் மாங்கல்யத்தில் சிலர் ஊக்குகளை (சேஃப்டி பின்) மாட்டி வைத்திருப்பார்கள். இது கணவனின் முன்னேற்றத்தையும் வருமானத்தையும் தடை செய்யும். இரும்பினால் ஆன எந்தப் பொருட்களையும் தாலியுடன் சேர்த்து அணியவோ, திருமாங்கல்யத்தில் கோர்க்கவோ கூடாது. காரணம், இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற ஒரு உலோகம். இது எதிர்மறை ஆற்றலையே தரும் என்பதால் தாலிச்சரட்டில் சேஃப்டி பின் போன்ற பொருட்களை கோர்க்காமல் இருப்பது நல்லது.

அதேபோல், தாலிக்கயிற்றை அடிக்கடி மாற்றக்கூடாது. தாலிக்கயிறு நைந்துபோன நிலையில் இருந்தாலோ, நூல் பிரிந்து விட்டாலோ நல்ல நேரம், கிழமை பார்த்து கயிற்றை மாற்றலாம். சிலர் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு போன்ற காரணத்திற்காக அடிக்கடி தாலிக்கயிற்றை மாற்றுவார்கள். இதுவும் தவறு.

சிலர் கடவுளுக்கு காணிக்கையாக வேண்டிக்கொண்டு தாம் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை கோயில் உண்டியலில் சேர்ப்பார்கள். இதுவும் தவறு. புதிதாக திருமாங்கல்யம் வாங்கி உண்டியலில் சேர்க்கலாம். கடவுளை சாட்சியாக வைத்து திருமணத்தில் கணவன் கையால் கட்டப்பட்ட தாலியை கோயில் உண்டியலில் சேர்ப்பது கடவுளுக்கு உகந்ததல்ல.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT