Do you know where and in which direction you should place the Buddha statue at home?
Do you know where and in which direction you should place the Buddha statue at home? https://housing.com
வீடு / குடும்பம்

வீட்டில் புத்தர் சிலையை எந்த இடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ற்போது பலரது வீடுகளிலும் வாஸ்துவிற்காக புத்தர் சிலையை வைப்பது வழக்கமாகி வருகிறது. நேர்மறை ஆற்றலின் சக்தியை அதிகரிக்கவும், வீட்டில் அமைதி நிலவவும் புத்தர் சிலைகள் வீட்டில் வைக்கப்படுகின்றன. அவை எந்த இடத்தில், எந்த திசையில் வைத்தால் நல்லது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்

வீட்டு வாசல்: புத்தர் சிலையை வீட்டின் நுழைவாயிலில் வைக்கலாம். கூடவே சில பூக்களுடன் கூடிய தண்ணீரை ஒரு பித்தளை பாத்திரம் அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைக்கலாம்.

தூங்கும் கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையை மேற்கு திசையை நோக்கி வைப்பது வீட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருகிறது. அந்த இடம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். அதன் முன்பு ஊதுபத்தி அல்லது பூக்கள் வைத்து வழிபாடு செய்வது நல்லது.

வீட்டின் வரவேற்பறை: வீட்டின் வரவேற்பறையில் புத்தர் சிலையை வைப்பது நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு வரவழைக்கும். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்த நேர்மறை ஆற்றல் கிட்டும். கிழக்கு. வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி வைத்தால் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

வாசலுக்கு எதிரே வீட்டினுள் இருக்கும் கப்போர்டு: இந்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது நன்று. இந்த இடம் வெளிச்சமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கிழக்கு திசை நோக்கி இருப்பது இன்னும் நல்ல பலன்களை தரும். வாழ்வில் நல்லது நடக்க உதவி செய்யும். இல்லை என்றால் வடக்கு நோக்கி வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு செழிப்பைத் தரும்.

குழந்தைகள் அறையில்: குழந்தைகள் இருக்கும் அறையில் புத்தர் சிலையை வைத்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை கூட அமைதித் தன்மையுடன் விளங்குவர்.

படுக்கையறை: வீட்டின் படுக்கை அறையில் கூட புத்தர் சிலையை வைக்கலாம். அங்கே ஒரு புனிதமான. அமைதியான சூழ்நிலையை உருவாக்கும். கணவன். மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படாது. புத்தர் சிலை வைத்திருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

எங்கெல்லாம் புத்தர் சிலையை வைக்கக்கூடாது?

புத்தர் சிலையை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. இது வாஸ்து தோஷத்திற்கு வழி வகுக்கிறது. எப்போதும் நமது கண் மட்டத்திற்கு மேலே இருக்க வேண்டும்.

குளியல் அறை, ஸ்டோர் ரூம் மற்றும் சலவை அறையில் புத்தர் சிலையை வைக்கக்கூடாது. குளிர்சாதனப் பெட்டி மற்றும் துவைக்கும் இயந்திரத்திற்கு அருகில் புத்தர் சிலையை வைக்கக்கூடாது. இவை நேர்மறை ஆற்றலை தடுக்கின்றன.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT