Causes of eye Pulse 
வீடு / குடும்பம்

உங்கள் கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? அதற்கான பலன்கள் என்னவென்று தெரியுமா?

மகாலெட்சுமி சுப்ரமணியன்

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். பொதுவாக, வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்று சொல்வர். கண்கள் துடிப்பதால் கீழ்க்காணும் பலன்கள் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

வலது புருவம் - பண வரவு உண்டாகும்.

இடது புருவம் - குழந்தை பிறப்பு, கவலைகள் உண்டாகும்.

புருவத்தின் இடையில் - பிரியமானவருடன் இருத்தல்.

கண் நடு பாகம் - மனைவியை பிரிந்திருத்தல்.

வலது கண் துடித்தால் - நினைத்தது நடக்கும்.

வலது கண் இமை - மகிழ்ச்சியான செய்தி வரும்.

இடது கண் இமைகள் - கவலைகள் உண்டாகும்.

வலது கண் கீழ்பாகம் - பழி சுமக்க நேரிடும்.

இடது கண் கீழ்பாகம் - செலவுகள் ஏற்படும்.

இவை ஒருபுறம் இருக்க, உண்மையில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை, வேறு குறைபாடுகளின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். குடிப்பழக்கம், சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காஃபி குடிப்பது, சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் படிப்பது போன்ற செயல்பாடுகள் காரணமாகவும் கண்களின் ஆரோக்கியம் குறைந்து, கண் துடிப்பதை உண்டாக்குகிறது.

மேலும், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண் துடிக்கும். ஆனால், நீண்ட நாட்கள் கண் துடிப்பது அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கக் கூடும்.

கண் துடிப்பினைத் தடுக்க தினமும் நன்றாக உறங்குவதுடன், கண்களுக்குப் போதிய ஓய்வைக் கொடுக்கவேண்டும். கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, கண் துடிப்பது நிற்கும். கண் துடிப்போடு, கண் சிவத்தல், கண்ணில் எரிச்சல் இருந்தால் நீர் வடிதல், வீக்கம் இருந்தால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தானாக வீட்டில் கை வைத்தியம் பண்ணிக்கொள்வது பார்வை இழப்பிற்குக் கொண்டு விட்டுவிடும்.

இளையோர் முதல் முதியோர் வரை சூரிய நமஸ்காரம், கண் பரிசோதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்வது,ஆரோக்கிய உணவு, காற்றோட்டமான, வெளிச்சம் உள்ள இடத்தில் இருப்பது, படிப்பது, எழுதுவது போன்றவை கண்களுக்கு சிரமத்தைக் கொடுக்காது கண் பார்வையை மேம்படுத்தும்.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT