ஒவ்வொருவருக்கும் புருவ அமைப்பு என்பது வெவ்வேறு விதமான வடிவங்களில் காணப்படும். ஒருவரின் புருவ அமைப்பை வைத்தே அவரின் குணநலன்களை சொல்லி விடலாம். அது எப்படி என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வட்ட வடிவமான புருவங்கள்: வட்டமான புருவ வடிவம் கொண்டவர் மிகவும் அன்பான மனதுக்கு சொந்தக்காரர். எப்போதும் மற்றவர்களின் தேவைகளைப் பற்றி சிந்திப்பார். அவர் ஒரு முடிவை எடுக்கும்போது, அவர் என்ன விரும்புகிறார் என்பதுடன் பிறரின் விருப்பதிற்கும் மரியாதை தருவார். எடுக்கும் முயற்சியில் தனக்கும், பிறருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்.
நேரான புருவங்கள்: ஒருவரின் புருவங்கள் ஒரே நேர்கோட்டில் நேராக இருந்தால், அவர் மிகவும் தர்க்கரீதியான நபர் என்று அர்த்தம். எப்போதும் வாதம் செய்ய விரும்புவார்.
உயரமான புருவங்கள்: ஒரு நபரின் முகத்தில் உயரமான புருவங்கள் இருந்தால், அவர் சிறந்த ரசனைவாதியாக இருப்பார். மிகவும் அழகான நடை, உடை, பாவனைகளைக் கொண்டிருப்பார். தான் எடுக்கும் முடிவுகள் கடினமானதாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். தனது மனதிற்கு சரி என்று பட்டதை செய்வார்.
நீண்ட புருவங்கள்: நீண்ட புருவங்களைக் கொண்டவர்கள், நிறைய நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்தே இருப்பார்கள். மற்றவர்களை நன்றாக சமாளிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
குறுகிய புருவம்: குறுகிய புருவம் கொண்டவர்கள் வெளிப்படையாகப் பேசும் தன்மை உள்ளவர்கள். நாடகத்தனமான மனிதர்களை விரும்ப மாட்டார்கள். எனவே, இவர்களுக்கு குறைவான, ஆனால் நெருங்கிய நட்பு வட்டம் இருக்கும். பிறரிடம் உதவி கேட்பதற்கு தயங்குவார்கள்.
அடர்த்தியான புருவங்கள்: இவர்கள் மிகவும் தீர்க்கமானவர்கள். இயற்கையான தன்னம்பிக்கையும், நேர்படப் பேசுதலும் இவர்களது குணமாக இருக்கும். மிகவும் தர்க்கரீதியான நபர்கள். எப்போதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள்.
மெல்லிய புருவங்கள்: மெல்லிய புருவங்களைக் கொண்டவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். ஆனால், நல்ல அழுத்தமான ஆசாமிகள். அதே சமயம் அமைதியை விரும்புவர்.
குறுகலான புருவ வடிவம்: இவர்களின் புருவங்களின் உள்பகுதி, நுனிப்பகுதியை விட தடிமனாக இருக்கும். இவர்கள் வாழ்வில் அதிக சிரமத்தை தானாக ஏற்படுத்திக் கொள்வர். வம்பை விலை கொடுத்து வாங்கி விடுவார்கள்.
எஸ் வடிவ புருவம்: சிலரது புருவம் இயற்கையாகவே S வடிவில் இருக்கும். இவர்கள் வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுவார்கள். எதிலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.