LPG Gas 
வீடு / குடும்பம்

LPG கேஸ் பாதுகாப்பு- கவனிக்காவிட்டால் ஆப்பு!

A.N.ராகுல்

அன்றாடம் பல குடும்பங்களின் பசியை போக்குவதில் முக்கிய பொருளாக அனைவரின் வீட்டில் இருப்பது LPG கேஸ். அதை தவறாக பயன்படுத்துவதால் உண்டாகும் விபத்துகளைத் தடுக்கவும், பலர் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் LPGயை (Liquefied Petroleum Gas) எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்று பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும் சில நேரங்களில் நிகழும் சிறிய கவன சிதறல் பல அசம்பாவிதங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி LPG எரிவாயுவை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய முக்கியமான மற்றும் சில அரிதான பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

நமக்கு தெரிந்த, சிலருக்கு தெரியாத அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • LPG எரிவாயுவை பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் கசிவு உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அதற்கு எரிவாயு சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர்(Regulator) இணைப்புகளில் சோப்பு நுரையை பயன்படுத்திப்பாருங்கள்; அதில் பப்பிள்ஸ் தோன்றினால் கசிவைக் குறிக்கிறது( காரணம் பல இடங்களுக்கு இந்த சிலிண்டர் கொண்டு சென்று வருவதால் ஏற்படும் சேதங்களால் கூட இருக்கலாம்).

  • சிலிண்டர் நிமிர்ந்து நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்.

  • பாதுகாப்புத் தர சான்றுதலுக்கு இணங்கக்கூடிய ரெகுலேட்டரைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்

  • அதில் இருக்கும் ரப்பர் குழாயில் ஏதேனும் தேய்மானம் அல்லது சேதம் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இது மாற்றப்பட வேண்டும்.

  • LPG யை பயன்படுத்தும் போது, அடுப்பை என்னேறமும் நோட்டம் விட்டுக் கொண்டே இருங்கள்.

  • பயன்பாட்டிற்குப் பிறகு சிலிண்டரில் இருந்து எரிவாயு விநியோகத்தை(Regulator) எப்போதும் அணைத்துவிட வேண்டும் அடுப்பு கைப்பிடிகள்(Stove knobs) அணைத்தால் மட்டும் போதாது.

  • அருகில் சீக்கிரம் பற்றி எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • வாயு வாசனை கசிவதை உணர்ந்தால் சுவிட்சுகள் அல்லது மின் உபகரணங்களை இயக்க வேண்டாம்; இது வாயுவை பற்றவைக்கக்கூடும்.

  • காற்றோட்டமாக இருக்க செய்ய கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரிய பாதுகாப்பு திட்டங்கள்(Rare Safety Plans):

  • அரிதான சந்தர்ப்பங்களில், தீயை அணைக்கும் கருவியை வைத்திருப்பது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து வைத்து கொள்வது கூடுதல் நன்மையாகும்.

  • சமையலறையில் எரிவாயு கசிவு கண்டறியும் கருவியை(gas leak detector) நிறுவுவது கசிவுகள் பற்றிய முன்கூட்டியே எச்சரிக்கைகளை உங்களால் பெற முடியும்.

  • வீட்டில் உள்ள அனைவரும் எரிவாயு கசிவு அல்லது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள, அவசரகால வெளியேற்ற திட்டங்களைத் தவறாமல் பயிற்சி செய்து கூட பார்த்துக் கொள்ளலாம்.

  • இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் அவர்களின் பாதுகாப்பையும் நீங்கள் உறுதி செய்யலாம்.

கவனிக்கப்படாத ஆபத்துகள்:

  • LPG சிலிண்டர்களை முறையற்ற வகையில் வைப்பது பெரும்பாலும் அனைவராலும் கவனிக்கப்படாத ஓர் ஆபத்து. ஒரு சிலிண்டரை ஒருபோதும் அடித்தளத்திலோ(Basement) அல்லது மூடிய இடத்திலோ(enclosed space) வைக்க வேண்டாம். ஏனெனில் கசிவு ஏற்படும் போது வாயு வெளியேறாமல் அங்கேயே குவிந்து தேவையற்ற வெடிப்புகளை ஏற்படுத்தலாம்.

  • மற்றொரு ஆபத்து தரமற்ற கருவிகளைப் பயன்படுத்துவது அதாவது லோக்கலாக தயாரிக்கப்பட்ட ரெகுலேட்டர்கள் அல்லது டியூப்கள் போன்றவை பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். அதனால் எப்போதும் சான்றளிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • இறுதியாக, எரிவாயு சம்பந்தமான உபகரணங்களின் வழக்கமான பராமரிப்பு மிகவும் முக்கியமானது. காலப்போக்கில் ஏற்படும் தேய்மானங்களால் சில சிறிய கசிவுகள் அல்லது செயலிழப்புகள் ஏற்படலாம். ஏனவே உங்கள் LPG கேஸ் அமைப்பை ஆண்டுதோறும் தொழில்முறை ஆய்வு(professional inspect) செய்து பராமரிப்பது சில சாத்தியமான சிக்கல்களைத் தடுக்கலாம்.

என்னதான் இண்டக்ஷன்(Induction stove) போன்ற வசதிகள் வந்தாலும் கேஸ் ஸ்டவ் கொடுக்கும் ஆனந்த அனுபவம் பல இல்லத்தரசிகளுக்கு அவ்வளவு எளிதில் அவர்களின் மனதை விட்டு போகாது. ஆகையால் எவ்வளவுக்கு எவ்வளவு நாம் சமையலை நேசித்து பார்த்து பார்த்து சமைக்கிறோமோ, அதை போல் ஒவ்வொரு மணித்துளிகளிலும் நாம் கேஸ் சிலிண்டர் முன் நின்று கொண்டிருக்கிறோம்; எந்த நேரத்திலும் நம் கவனம் சிதறக் கூடாது என்பதை மனதில் வைத்து உங்கள் சமையல் ஜாலத்தை நிறைவேற்றுங்கள்!

எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

SCROLL FOR NEXT