Happy with your siblings.
Happy with your siblings. 
வீடு / குடும்பம்

உங்க உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கா ஆசையா? அப்படின்னா இந்த 6 விஷயங்களை பண்ணுங்க! 

கிரி கணபதி

உடன்பிறந்தவர்கள் என்பவர்கள் ஒருவருக்கு தன் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும். பெரும்பாலான சமயங்களில் அவர்கள் உங்களுக்கு உற்ற நண்பர்களாக கை கொடுக்கின்றனர். ஆனால் பலருக்கு இந்த உறவை எப்படி சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே இந்த பதிவில் உடன் பிறந்தவர்களுடன் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  1. குடும்ப பொறுப்புகளை சமமாகப் பாருங்கள்: குடும்ப பொறுப்புகளை ஒருவர் தலையிலேயே கட்டி விடாமல், உங்கள் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் அவர்களுடன் ஒரு நல்ல தொடர்பு உண்டாக்கிக்கொள்ள முடியும். இது குடும்பச் சுமையை எளிதாக்குவது மட்டுமின்றி, சகோதர, சகோதரிகள் உறவில் அன்பையும், அரவணைப்பையும், பாதுகாப்பையும் ஊக்குவிக்கிறது. 

  2. நண்பர்களைப் போல் பேசுங்கள்: நட்பு என்ற உறவு எப்போதுமே உன்னதமான ஒன்றுதான். அதில் எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இருக்காது. எனவே உங்கள் உடன்பிறந்தவர்களையும் ஒரு நண்பர்களைப் போல பாவித்து பேசுவது உறவில் நல்ல பிணைப்பை ஏற்படுத்தும். இதன் மூலமாக உங்களுக்கு மத்தியில் நல்ல பிணைப்பு உருவாகி, மகிழ்ச்சியான தருணங்கள் நல்ல தோழமையை உருவாக்கும். 

  3. மோசமான நிலையில் கை கொடுங்கள்: உங்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மோசமான காலகட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவ முயற்சிக்கவும். இது உறவுகளுக்கு மத்தியே, நம்பிக்கையையும் கூடுதல் பிணப்பையும் ஏற்படுத்தும். இதன் மூலமாக உங்கள் உடன் பிறந்தவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். 

  4. ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்: சில குறிப்பிட்ட நேரத்தை ஒன்றாக செலவிடுவது உடன் பிறந்தவர்களுக்கு மத்தியில் நல்ல புரிதலை ஏற்படுத்தி பிணைப்பை அதிகரிக்க உதவுகிறது. ஒன்றாக சேர்ந்து சமைப்பது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற எளிய செயல்கள் கூட உங்கள் உறவுகளுக்கு மத்தியில் நல்ல உணர்வை ஏற்படுத்தும்.

  5. பரிசு கொடுங்கள்: எந்த உறவாக இருந்தாலும் அதில் பரிசு கொடுக்கும் பழக்கம் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்கள் எதிர்பாராத போது நீங்கள் கொடுக்கும் பரிசு அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையையும் பிரதிபலிக்கும். எனவே இப்படி பரிசுகள் கொடுப்பது உங்களின் பாசத்தை வலுப்படுத்தும். 

  6. நிகழ்வுகளை ஒன்றாகக் கொண்டாடுங்கள்: ஒருவேளை உங்கள் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகி வேறு குடும்பம் இருந்தால் அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒன்றாக சேர்ந்து கொண்டாடுங்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு உறவுகளுக்கு மத்தியே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலமாக உங்கள் உடன் பிறந்தவர்களை மேலும் புரிந்துகொண்டு நன்றாக உணர வைக்கும்.

இப்படி எல்லா நிலைகளிலும் உங்கள் உடன் பிறந்தவர்களிடம் எதையும் எதிர்பாராமல் நீங்கள் செயல்படும்போது, அந்த உறவில் கூடுதல் பிணைப்பும், மகிழ்ச்சியும், பாசமும், அன்பும் என்றும் நிறைந்திருக்கும்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT