Purchasing dress with family 
வீடு / குடும்பம்

உங்கள் ஷாப்பிங் மனநிறைவானதாக அமையணுமா?

A.N.ராகுல்

சரியான மனநிலையுடன் புது ஆடைகளை வாங்குவது ஒரு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும். காரணம் நல்ல தரமான ஆடைகளை வாங்குவதற்காக ஷாப்பிங் செய்யும் போது நாம் நேர்மறையான மனநிலையில் இருந்தால் சில ஆடைகளின் விலைக்கும் தரத்திற்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொண்டு வாங்குவதற்கு சுலபமாக இருக்கும். அதை எப்படி பின்பற்றலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. ஆடையின் தரத்தைப் புரிந்துகொள்வது

துணி:

உயர்தர துணிகளை நாம் உடுத்தும் போது, அது நம் சருமத்திற்கு ஒரு நல்ல உணர்வை தரும். பருத்தி, கம்பளி, பட்டு மற்றும் கைத்தறி (cotton, wool, silk, and linen) போன்றவை அதிகம் பேர் பயன்படுத்தும் வகைகள். அதனால் ஆடையில் உள்ள லேபிளில் குறிப்பிட்டுள்ள துணியின் ரகத்தை கட்டாயம் சரிபார்க்கவும்.

வடிவமைப்பு:

ஆடையில் பயன்படுத்தியுள்ள மொத்த தையலையும் ஆய்வு செய்யுங்கள். உயர்தர ஆடைகள் தளர்வான நூல்கள் இல்லாமல் சமமான, இறுக்கமான தையல்களை கொண்டிருக்கும். அதனால் ஆடைகளை உள் பக்கம் வெளி பக்கம் என்று நன்கு ஆராய்ந்து வாங்குங்கள்.

பொருத்தம்:

உங்கள் உடலுக்கு நன்றாக பொருந்தும் ஆடைகள் உங்கள் தோற்றத்தையும் சவுகரித்தையும் மேம்படுத்துகிறது. உங்கள் தோள்கள், மார்பு மற்றும் இடுப்பு பகுதிகளில் நன்றாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், சரியான பொருத்தத்திற்கு சிறிய மாற்றங்களை கூட நீங்கள் செய்து கொள்ளலாம்.

2. பயனுள்ள ஆடைகள் ஷாப்பிங்கிற்கு காண சில குறிப்புகள்

ஆராய்ச்சி:

ஷாப்பிங் செல்வதற்கு முன், உங்களுக்கு தெரிந்த பிராண்டுகள், அவற்றின் தயாரிப்பு தரம் மற்றும் வாங்கப்போகும் கடையின் விமர்சனங்களை பற்றி ஆராயுங்கள்.

முன்னோக்கி திட்டமிடுங்கள்:

முன்கூட்டியே என்றைக்கு போக வேண்டும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும், உங்கள் பட்ஜெட் என்ன போன்ற விஷயங்களை முன்கூட்டியே முடிவு செய்து உங்களை மனதளவில் தயார் படுத்தி கொள்வது நல்லது.

ஒரு ஆடையை வாங்குவதற்கு முன்:

ஒரு ஆடையை வாங்குவதற்கு முன் எப்போதும் போட்டு பார்த்து வாங்குங்கள். இது உங்கள் உடலுக்கு சரியாக உள்ளதா மற்றும் சவுகரியமாக உள்ளதா என்று மதிப்பிட உதவுகிறது. குறிப்பிட்ட உடை சரியாக இருப்பதை உறுதி செய்ய சற்று நடந்து பாருங்கள், உட்காரவும், கை கால்களை ஸ்ட்ரெட்ச் செய்தும் கூட பார்க்கலாம்.

விவரங்களை சரிபார்க்கவும்:

கூடுதல் பொத்தான்கள் மற்றும் உறுதியான ஜிப்பேர்ஸ் போன்ற தரம் சார்ந்த விஷயங்களை கவனியுங்கள். கறை அல்லது விடுபட்ட பட்டன்கள் போன்ற குறைபாடுகளை ஆராய்ந்து ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.

பராமரிப்பு வழிமுறைகள்:

ஆடையை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் புரிந்து கொள்ள பராமரிப்பு லேபிள்களைப் படிக்கவும். காரணம் சில உயர் பராமரிப்பு ஆடைகள் அன்றாட உபயோகிக்கும் நடைமுறையில் பொருந்தாது.

ஷாப்பிங் செய்யும் போது நேர்மறையான மனநிலையுடன் எப்படி இருக்கலாம்

பட்ஜெட்டை அமைக்கவும்:

நீங்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிவது நிதி அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதனால் வருத்தத்தைத் தவிர்க்க உங்கள் பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையுடன் இருப்பது நல்லது.

ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்:

சிலருக்கு நீண்ட நேரம் ஷாப்பிங் செய்வதால் சோர்வாக உணர்வார்கள். அதற்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து, உடலை நீரேற்றமாக வைத்துக்கொண்டு இடைவெளிகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களை உற்சாகமாகவும் நீண்ட நேரம் ஷாப்பிங்கில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

நண்பருடன் ஷாப்பிங் செய்யுங்கள்:

ஒரு நண்பரை உடன் அழைத்து செல்வது ஷாப்பிங்கான அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். அவர்கள் நேர்மையான கருத்துக்களை வழங்க முடியும் மற்றும் சிறந்த தேர்வுகளை செய்ய உங்களுக்கு உதவலாம்.

திறந்த மனதுடன் இருங்கள்:

வெவ்வேறு ஸ்டைல்கள் மற்றும் வண்ணங்களை தேர்ந்தெடுக்க பாருங்கள். இதை உங்களை ஒரு இனிமையான தருணத்திற்கு அழைத்து செல்ல வழிவகுக்கலாம்.

‘பீக் ஹவர்ஸை’ தவிர்க்கவும்:

நெரிசல் இல்லாத நேரங்களில் ஷாப்பிங் செய்வது மனதிற்கு ஓர் அமைதியான உணர்வை தந்து ஷாப்பிங்கை எளிமையாக்கும்.

விலைக்கும் தரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

அதிக விலை மற்றும் தரம்:

விலையுயர்ந்த பிராண்டுகள் பெரும்பாலும் சிறந்த பொருட்கள் மற்றும் கைவினைத்திறனைப் பயன்படுத்துகின்றன. இது உயர் தரத்தை உறுதிப்படுத்தும். இருப்பினும், பிராண்ட் பெயர் மற்றும் அவர்களின் மார்க்கெட்டிங் ஆகியவற்றிற்கும் மட்டுமே நம்பி எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.

மலிவுவில் ஒளிந்திருக்கும் தரம்:

நல்ல தரத்தை வழங்கும் பல மலிவு பிராண்டுகள் உள்ளன. அதன் விற்பனை, மற்றும் இருக்கும் தள்ளுபடிகளை ஓரம் தள்ளி உங்கள் விருப்பங்களை மட்டும் தேடி பாருங்கள். காரணம் சிறு கடைகளில் கூட குறைந்த விலையில் உயர்தர பொருட்களைக் கண்டறிய முடியும்.

விலை vs மதிப்பு:

ஒரு உடையின் விலையை வைத்து அதன் மதிப்பை எடை போடுவதை விட்டு. அதன் தரத்தை ஆராய்ந்து அதற்கான மதிப்பை உணர்வதே சிறந்தது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT