Live a successful life... Image credit - pixabay
Motivation

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய 12 விஷயங்கள்!

கல்கி டெஸ்க்

-வி. ராஜமருதவேல் 

1.தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள், ஒரு புத்தகம் படியுங்கள், பிடித்ததை செய்ய முயற்சி செய்யுங்கள்.

2.கோபத்தில் எப்போதும் முடிவுகளை எடுக்காதீர்கள் அவை சரியான முடிவாக இருக்காது.

3.எந்த  சூழலிலும் எந்தவொரு முடிவையும் நாம் மனதளவில் ஆழமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அல்லது நல்லதாக இருந்தாலும் கடைசியில் அனைத்தும் கடந்து போகும்.

4.சோஷியல் மீடியாவில் பல நண்பர்களை உருவாக்குவதற்கு பதிலாக, நான்கு ஐந்து உண்மையான நண்பர்கள்தான் வாழ்க்கை பயணத்திற்கு தோள் கொடுப்பார்கள். அவர்கள்தான் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்பார்கள்.

5.வெற்றிகரமான வாழ்க்கை வாழ விரும்பினால், உணர்ச்சிவசப்படும் விஷயங்களுக்கு தங்கள் நேரத்தை வீணாக்காமல், நேர்மறை எண்ணங்களுடன், நம் இலக்குகளை நோக்கி பயணிக்கவேண்டும்.

6.கவலை உங்களுக்கு எங்கும் சுலபமாக கிடைக்கும், குறிப்பாக ஒரு சூழ்நிலையைப் பற்றி உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால் தான் கவலை நம்மை பிடித்துக் கொள்கிறது. நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையை நாம் துணிந்து எதிர்கொண்டால் கவலை போய்விடும்.

7.மற்றவர்களுக்கு நாம் கெடுதல் நினைத்தால் அதுவே, நாம் விரும்பாத போதும், அது நம்மிடம் மீண்டும் வரும். அதனால் பிறரையும், தம்மை போலவே எண்ண முயற்சிக்க வேண்டும். நாம் மற்றவருக்கும் நல்லதையே எண்ணவேண்டும்.

8.நாம் வாழ்வில் உயரவில்லை என்றால், பலரும் நம்மை உதாசீனம் செய்வார்கள். அதனால் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொள்ளுங்கள்.

9.நம் வாழ்க்கை நம் கையில். இதன் முக்கியத்துவம் நாம் வாழும் வாழ்க்கையின் தன்மையாலே வரையறுக்கப் படுகிறது அதை வைத்து நம்மை சமூகம் எடை போடுகிறது. அதனால் நாம் சமூகத்தை குறை சொல்வதை விட்டு, நம்மை நாமே செப்பனிட வேண்டும்.

10.வேறொருவரின் கொள்கை, கனவுகளை, நமக்கும் இது எல்லாம் வேண்டும், என்று அடுத்தவரின் வாழ்க்கை பாதையில் நாம் போகாமல், இது நம்முடைய பாதை, அது நம்மை எங்கு கொண்டு செல்கிறது,என்பதை பார்க்க ஆவலுடன்,அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும்.

11.அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற பயம், ஒருபோதும் நமக்கு வேண்டாம். ஒருவரும், யாரையும், நினைப்பது இல்லை. அவரவர்களின் எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம்.

12.வாழ்க்கை என்பது ஒரு முறைதான் அனைவருக்கும். அதை முழுவதுமாக வாழவேண்டும், சந்தோஷமாக, நமக்கு எதில் விருப்பம் உள்ளதோ, அதில் வளர்த்து கொண்டே முன்னே செல்ல வேண்டும். நன்கு மனதார வாழ்ந்து விட்டால், நான் அப்படி இல்லையே, இப்படி இதை செய்யவில்லையே என்ற ஏக்கம் பின்னாளில் வருவதைக் கண்டிப்பாக தவிர்க்கலாம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT