காலையில் சீக்கிரம் எழுதல் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் செயல்கள் அதைவிட முக்கியம். குறிப்பாக காலையில் நாம் செய்யும் செயல்கள்தான், அன்றைய நாளை நிர்ணயிக்கிறது. எனவே நாம் நம்முடைய காலை வேலையினை சிறப்பாகத் தொடங்குவோமாக.
ராபின் ஷர்மா எனும் ஆகச் சிறந்த எழுத்தாளர், மிகப்பெரிய பேச்சாளர், தனது The 5 a.m. Club என்னும் புத்தகத்தில், காலையில் நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய செயலினை சிறப்பாக விவரித்திருப்பார்.
அதனை 20/20/20 Concept என்று கூறுவார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தினசரி காலை எழுந்ததும் முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற் பயிற்சி மேற்கொள்வதால் நம்மை மகிழ்ச்சிப்படுத்த கூறிய அனைத்து ரசாயனங்களும் வெளியேறி நம்மை புத்துணர்வாக்கும். அது அந்த நாளை நாம் சிறப்பாக வழிநடத்த பயன்படும்.
இரண்டாவது 20 நிமிடம் நாம் நம்மைப் பற்றியும் நமது வாழ்க்கை முறை பற்றியும் சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் என்ன செய்தோம்? தற்பொழுது என்ன செய்கிறோம்? எதிர்காலத்தில் இது நம்மை எங்கு கொண்டு செல்லப் போகிறது? என்பது பற்றி தினசரி சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தினசரி என்ன செய்யப் போகிறோம்? என்பதற்கான அட்டவணைகளை போட வேண்டும். இது நமக்கு நம்மைப் பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்த பயன்படும்.
மூன்றாவது 20 நிமிடம் எதையேனும் புதியதாய் கற்க வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களை அறியாமல் ஒரு கட்டத்தில் இந்த சிறு செயலானது உங்களை மிகப்பெரிய அறிஞராக மாற்றலாம்.
எனவே இந்த 20/20/20 Concept முறையினை பயன்படுத்தி உங்களுடைய காலை பொழுதை சிறப்பாக கட்டமையங்கள். அது உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக வடிவமைக்கும்.