6 Psychological Tricks That Will Change Your Life! 
Motivation

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 6 உளவியல் தந்திரங்கள்! 

கிரி கணபதி

நாம் ஒவ்வொருவரும் தினமும் பலவிதமான மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறோம், பழகுகிறோம். அவர்களின் மனதை புரிந்துகொள்வதும், நம்மை நாமே புரிந்துகொள்வதும் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும். உளவியல் என்பது மனித மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் துறை. இந்தத் துறையிலிருந்து நாம் பல பயனுள்ள தந்திரங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றை நம் நிஜ வாழ்வில் பயன்படுத்தி, சிறப்பான நபர்களாக மாறலாம். இந்தப் பதிவில் உங்கள் வாழ்க்கைக்கு உதவக்கூடிய 6 உளவியல் தந்திரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

1. உடல் மொழி முக்கியம்: நீங்கள் வார்த்தையாக என்ன சொன்னாலும், உங்கள் உடல் மொழி உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும். எனவே, உங்கள் உடல் மொழியை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரது கண்ணைப் பார்த்து பேசுங்கள். எப்போதும் புன்னகையுடன் இருங்கள். இது உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பிறருக்கு உங்களை சிறப்பாகக் காட்டும்.

2. கேட்பது ஒரு கலை: மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்பது ஒரு சிறந்த திறன். ஒருவரிடம் பேசும்போது அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்காமல் அவர்களின் உணவுகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த உதவும்.

3. நேர்மறையாக பேசுங்கள்: எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பற்றி எதிர்மறையாக பேசாதீர்கள். நேர்மறையான வார்த்தைகள் உங்களது வாழ்க்கையை மாற்றக் கூடியவை. எனவே, உங்களை நீங்களே ஊக்கப்படுத்துவதோடு, மற்றவர்களையும் பாராட்டுங்கள்.

4. நினைவாற்றலை மேம்படுத்தும் தந்திரம்: நீங்கள் படிக்கும் விஷயங்களை உடனடியாக மறந்து விடுகிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் போது அதை உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்துடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். இது உங்கள் மூளைக்கு புதிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். 

5. மன அழுத்தத்தை நிர்வகித்தல்: நவீன கால வாழ்க்கைமுறை மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பல விஷயங்களைக் கொண்டுள்ளது.‌ ஆனால், சில எளிய நுட்பங்களைப் பயன்படுத்தி மன அழுத்தத்தை நாம் நிர்வகிக்கலாம். முதலில் உங்களது பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவற்றை சரியாக கையாள முடிவெடுத்தாலே, மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். 

6. இலக்கு நிர்ணயம்: ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சிப்பது உங்களை உண்மையிலேயே ஊக்கப்படுத்தும். உங்கள் இலக்கை சிறிய, அடைக்கூடிய பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் அடைய முயற்சி செய்தால் நிச்சயம் வாழ்வில் முன்னேறலாம்.

இந்த ஆறு தந்திரங்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துவதன் மூலம் நீங்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து வாழ்க்கையில் வெற்றி பெற உதவியாக இருக்கும். 

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT