மனிதர்களாகிய நாம் பிறரைப் பின்பற்றி வளர்வது இயல்பு. ஆனால் முழுவதும் பிறரையே பின்பற்றுவது சரியா என்று முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது. அப்படி பின் தொடர்ந்தால் என்ன நமக்கு பயன் என்பதை சிலவற்றை பார்ப்போம்.
1. அசல் தன்மையை இழப்பது:
அதிகப்படியான காப்பி அடிப்பது நமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனையைத் தடுக்கலாம். ஏற்கனவே உள்ள விஷயத்தை மட்டும் நம்பியிருப்பது தனித்துவமான நமக்குள் தோன்றும் யோசனைகள் அல்லது தீர்வுகளை உருவாக்குவதைத் தடுக்கும்.
2. தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கிறது:
நாம் எப்போதும் மற்றவர்களைப் பின்பற்றினால், தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். நமது சொந்த தவறுகளிடம் இருந்து மற்றும் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதே நம் வளர்ச்சிக்கு ரொம்ப அவசியம். அப்பொழுதுதான் நம் பின்னால் வரும் அடுத்த தலை முறைக்கு எது சரி எது தவறு என்று கூறும் இடத்தில் நாம் இருக்க முடியும்.
3. பிறரை சார்ந்துதிருந்தால்:
ஒவ்வொரு முறையும் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நம் மனம் அதனை சார்ந்துதிருக்கும் போது. நமது சுயஅறிவு திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எனவே அதை வளர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை நமக்குள் உருவாக்க வேண்டும்.
4. பொது அறிவு சிந்தனை இழப்பு:
புரிதல் இல்லாமல் ஒரு விஷயத்தை பண்ணும் பொழுது அது நமது பொது அறிவு சிந்தனையின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதை விட அதை முழுவதுமாக analyze செய்து மாற்றியமைப்பது முக்கியம்.
5. புதிய ஆய்வுகளைத் தடுப்பது:
ஒரு விஷயத்தை அப்படியே காப்பி அடிப்பதால் நமது இயல்பான ஆய்வு மற்றும் பரிசோதனையை குறைகிறது. இது காலப்போக்கில் அப்படியே பழகிவிடும். ஆகையால் இதை கடந்து வர புதிய புதிய அணுகுமுறைகளை முயற்சிப்பது மற்றும் அதன் மூலம் வரும் அபாயங்களை தாண்டி வந்தால் தான் அது நம் முன்னேற்ற வழிக்கான பாதையை அமைத்து தரும்.
6. குழுவோடு நம் சிந்தனையை அடைப்பது :
ஒரு குழுவிற்குள் இருக்கும் பொழுது ஏதோ ஒரு விஷயத்தில் தவறான பதிலை ஒரு மனதாக எல்லோரும் கூறும் பொழுது ஒருவேளை அந்த பதில் தவறாக இருந்து உங்களுக்கு மட்டும் அந்த சரியான பதில் தெரிந்திருக்கும். ஆனால் நாம் கூறும் பதில் தவறாக இருந்தால் மற்றவர்கள் நம்மை என்ன சொல்வார்கள் என்று மற்றவர்களின் கருத்தை எதிர்பார்ப்பதே நம் வாழக்கையில் ஒரு சறுக்கல் தான்.
7.வருத்தமும் மனக்கசப்பும்:
நம்முடைய சொந்த ஆசைகளைக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களின் வழிகளைப் பின்பற்றுவது பிற்காலத்தில் கண்டிப்பாக எதோ ஒரு சூழ்நிலையில் நமக்குநாமே வருத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.
8.சமூக அழுத்தம்:
ஒரு கூட்டத்தைப் பின் தொடர்வதே ஒரு வழக்கமாக நம் வாழ்வில் வைத்திருக்கலாம். ஆனால் அதுவே நம்மை சமூக அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எதோ ஒரு நாள் நம் மதிப்புகள் அல்லது நம்பிக்கைகள் நம்மிடம் இருந்து போகும் பொது. என்னதான் யார் வந்து சமரசம் செய்தாலும் இறுதியில் அது மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் கெட தீங்கு மட்டுமே விளைவிக்கும். ஆகையால் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்த போடும் செயல்களை விடுவதே நல்லதாகும்.