அமெரிக்காவில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படவும் ஜனநாயக ரீதியான அமைப்புகள் உரு வாகவும், அவற்றில் நல்ல மாற்றங்கள் ஏற்படவும் காரணமாக இருந்தார். நவீன அமெரிக்காவின் உருவாக்கத்தில் பெஞ்சமின் பிராங்க்ளினின் பங்கு மகத்தானது. இவ்வளவு சாதனைகளுக்கும் காரணம், அவர் தனது இளம் பருவத்தில் வாழ்க்கையைத் திட்டமிட்டு, அறிவியல் கண்ணோட்டத்துடன் வாழ்ந்ததுதான்.
பெஞ்சமின் பிராங்கிளின் தனது 79 ஆவது வயதில் காலமாகும் வரை கடைபிடித்த 13 பழக்க வழக்கங்கள் இதோ:
1. உண்பதிலும் அருந்துவதிலும் சுயகட்டுப்பாடு. உடலைச் சோர்வடையச் செய்யும் உணவை உண்ணக் கூடாது. மனிதனின் நிலையைத் தாழ்த்தும் பானங்களை அருந்தக்கூடாது.
2. வீண் பேச்சு பேசக்கூடாது. வதந்திகளைப் பேசக்கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்.
3.எல்லாப்பொருட்களையும் வைப்பதில் ஒழுங்கு வேண்டும். உரிய இடத்தில் வைக்க வேண்டும். செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
4. எந்தச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ அதில் ஓர் உறுதிவேண்டும். உறுதியோடு செயலில் ஈடுபட வேண்டும்.
5. உங்களுக்கோ பிறருக்கோ எந்த நன்மையும் செய்யாத ஒன்றுக்காக வீண் செலவு செய்யக் கூடாது. சிக்கனம் அவசியம்.
6. நேரத்தை வீணாக்கக்கூடாது. பயனுள்ள செயல்களில் மட்டுமே எப்போதும் ஈடுபட வேண்டும்.
7.நேர்மையாக உண்மையாக இருத்தல் முக்கியம் வஞ்சகமான பிறருக்குத் தீங்கிழைக்கும் நேர்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.
8. அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது ஏற்படும் இழப்புகள், காயங்கள் ஆகியவற்றுக்காக கவலைப்படக் கூடாது அறத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது.
9. முற்றிலும் நேர் எதிரான வெவ்வேறு நிலைகளுக்குச் செல்லக் கூடாது. இயல்பான வாழ்க்கை நல்லது கடுமையாக இருக்கக் கூடாது.
10. உடை உடல் உறைவிடம் ஆகியவற்றை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
11. பாலியல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்
12 உங்களுக்குப் போதிய அளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றாலோ, எதிர்பாராத தவிர்க்க முடியாத செயல்கள் உங்களை மீறி நடந்தாலோ மனம் வெதும்பக் கூடாது.
13. எந்தச் சூழ்நிலையிலும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவியல்பூர்வமான வாழ்க்கைச் செயல்முறையை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்.