Motivation image
Motivation image Image credit - pixabay.com
Motivation

வெற்றியாளர்களின் 7 தனித்துவமான ஆளுமைப்பண்புகளை பற்றித் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ல்லோருமே சராசரி மனிதராக இருக்க விரும்புவதில்லை. வாழ்வில் வெற்றியாளராக மிளிரவே ஆசைப் படுகிறார்கள். அதற்கான திறமையும் மெனக்கெடலும் தனித்துவமான பண்புகளும் அவசியம் வெற்றியாளர்களின் தனித்துவமான ஆளுமைப் பண்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1. இலக்குகள்

வாழ்வில் மிக உறுதியான இலக்குகளை கொண்டவர்கள் வெற்றியாளர்கள். வெறுமனே நண்பர்களுடன் அமர்ந்து பேசும்போது மட்டும் தன்னுடைய ஆசைகளை இலக்குகளாக குறிப்பிடாமல் தன்னுடைய ஆழ்மன விருப்பங்களை இலக்குகளாக அமைத்துக் கொள்கிறார்கள். அதை நோக்கி பெரு விருப்பத்துடன் கடுமையான செயல்படுகிறார்கள். அதனால் அவர்களது இலக்கை எப்படியேனும் அடைந்து வெற்றி பெறுகிறார்கள்.

2. தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு எழுதல்

வெற்றியாளர்கள் தங்களுடைய செயல்களில் தோல்வியை தழுவினால் அதற்காக கவலைப்படுவதோ அல்லது முயற்சியைக் கைவிடுவதோ இல்லை. தோல்வியை ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு மேலும் முயற்சி செய்து வெற்றியடைகிறார்கள்.

3. சுய ஒழுக்கம்;

அவர்கள் சுய ஒழுக்கத்தை உயிராக மதிக்கிறார்கள். அதிகாலையில் எழுவது, உடல் பயிற்சி, சத்தான உணவு, தீய பழக்கங்கள் இன்றி இருத்தல், என வாழ்கிறார்கள். குறித்த நேரத்தில் தங்களுடைய வேலைகளை செய்கிறார்கள். குறுகிய கால இன்பங்களை தியாகம் செய்கிறார்கள். அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அவர்களுடைய செயல்பாடுகளை மேம்படுத்துவதாக எப்போதும் இருக்கும்.

4. நம்பிக்கை

தோல்வி மனப்பான்மை உடையவர்கள் சாதாரண விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போவார்கள். முயற்சியை கைவிடுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் தங்களை முழுமையாக நம்புகிறார்கள். தங்களுடைய செயல்பாடுகளில் தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை கடந்து தங்களால் ஜெயிக்க முடியும் என்று முழு மனதோடு நம்புகிறார்கள். தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். 

5. மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்

உலகம் மாறுவதற்கு ஏற்ப தன்னையும் ஒரு வெற்றியாளர் மாற்றிக் கொள்கிறார். புதிய சூழ்நிலைகள் புதிய சிந்தனைகள் புதிய வாய்ப்புகள் என அவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். தன்னுடைய சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறுகிறார்.

6. பேரார்வம்

தாங்கள் செய்யும் செயலில் மிகுந்த பேரார்வம் கொண்டிருப்பார்கள் வெற்றியாளர்கள். ஒரு பணியை எடுத்து அதை தொடங்கி விட்டால் அதில் மூழ்கி அரைகுறையாக செயல்படாமல் முழு மனதோடு ஈடுபாட்டுடன் உற்சாகத்தோடு செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை நடத்தினாலும் சரி அல்லது பிற நிறுவனத்தில் பணி செய்தாலும் அதை முழு மனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறார்கள். அந்த பேரார்வமே அவர்களுக்கு வெற்றியை தேடித் தருகிறது. 

7. உணர்ச்சி நுண்ணறிவு;

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் உணர்ச்சி நுண்ணறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும் மக்களை நன்றாக புரிந்து கொள்கிறார்கள்.  பிறருடைய இடத்தில் இருந்து அவர்களது உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வதால்தான் இவர்கள் வெற்றியாளர்களாக வலம் வர முடிகிறது.

ஒரு மாதத்திற்கு தினசரி பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்? அச்சச்சோ!  

தனிமை விரும்பிகள் பற்றிய 10 சுவாரசியமான உண்மைகள்!

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் தெரியுமா?

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மனோரா கோட்டை வரலாறு!

உங்கள் குழந்தையின் IQ லெவலை உயர்த்தும் 5 வழிகள் இதோ!

SCROLL FOR NEXT