social media 
Motivation

எனது சமூக ஊடகப் பழக்கத்தை நிறுத்திய புத்தகம்! 

கிரி கணபதி

நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்கள் நம்மை அதிகமாக பயன்படுத்த வைத்து, மகிழ்ச்சியான உணர்வை அளிக்கிறது. ஆனால், இந்த தளங்களின் அதிக பயன்பாடு நம் மனநிலையையும், உடல்நிலையையும் பாதிக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு மன அழுத்தம், பதட்டம், தனிமை உணர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இது தூக்கமின்மை, கவனக்குறைவு, உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பலர் முயற்சி செய்தாலும் சமூக ஊடகங்களின் கவர்ச்சியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். 

நானும் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு நபர்தான். ஆனால், ஒரு புத்தகம் எனது சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவியாக இருந்தது. அதுதான் ‘அன்னா லெவி’ என்ற எழுத்தாளர் எழுதிய ‘டோபமைன் நேஷன்’ என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தில் அவர் சமூக ஊடகங்கள் நம் மூளைக்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அதிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார். 

“Dopamine Nation” புத்தகம் நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நமக்கு விரிவாக விளக்குகிறது. நாம் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது நம் மூளை டோபமைன் என்ற ரசாயனத்தை வெளியிடுகிறது. இந்த டோபமைன் நமக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. சமூக ஊடகங்கள் இந்த டோபமைன் வெளியீட்டை அதிகரிப்பதால் நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகின்றன. 

லெவி, சமூக ஊடகங்கள் நம்மை எவ்வாறு கவனத்தை திசை திருப்புகின்றன என்பதை விளக்குகிறார். நாம் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கும்போது நமக்கு புதிய அறிவிப்புகள், லைக்குகள், கமெண்ட்கள் போன்றவை கிடைக்கும். இந்த அறிவிப்புகள் நம் மூளையைத் தூண்டிவிட்டு நாம் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்ய வைக்கின்றன. இதனால், நாம் முக்கியமான வேலைகளை செய்யாமல் சமூக ஊடகங்களில் நேரத்தை வீணடிக்கிறோம். 

அவர், சமூக ஊடகங்கள் நம்மை பிறருடன் ஒப்பீடு செய்யும் மனோபாவத்தை அதிகரிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மற்றவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது நம் வாழ்க்கை அவர்களைப் போல இல்லை என்று நினைத்து வருத்தப்படுகிறோம். இது நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கி தன்னம்பிக்கையை குறைக்கிறது.‌ 

இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபட ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நாம் குறைக்க வேண்டும். எப்போதும் அமைதியான சூழலில் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சமூக ஊடகங்களில் நேரம் செலவிட வேண்டும். முடிந்தவரை சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு ஏதேனும் செயல்பாட்டில் ஈடுபடலாம் என்பது போன்ற ஆலோசனைகளை அவர் வழங்குகிறார். 

“டோபமைன் நேஷன்” என்ற புத்தகம் சமூக ஊடகங்களின் ஆபத்துகள் பற்றி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகிறது. இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் என்னைப் போலவே நீங்களும் நிச்சயம் சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட முடியும். 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT