motivation image Image credit pixabay.com
Motivation

உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ்!

இந்திரா கோபாலன்

வன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனுள் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரண நெசவாளி.  அவன்  கைகள் அப்பாவுடன் ஆடைகளை நெசவு செய்தபோது  மனமோ கனவுகளை நெசவு செய்தது. திசை தெரியாது பேசித்திரியும் வெற்று இளைஞனாக அவன் இல்லை. கடல் மார்க்கமாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற எண்ணம்  அவனிடம் இருந்தது.

இந்தியாவுக்குக் கடல் மார்க்கம்  கண்டுபிடிக்கும் வெறி கப்பல் கப்பலாக அவனிடம் குவிந்திருந்தது. அந்த இளைஞன்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ். கொலம்பசுக்கு உதவத்தான் எவரும் இல்லை. அவன் அசரவில்லை. பலநாட்டு அரசர்களை உதவி கேட்டும், கப்பல் கப்பலாக உணவும் இதர பொருள்களும், கப்பலைச் செலுத்தும் மனிதர்களையும் கொடுக்க எந்த அரசும் துணியவில்லை.

பத்து வருடகாலம் போராடிய பின் ஸ்பெயின் நாட்டு இளவரசி  இஸபெல்லாவுக்கு கொலம்பஸ் மீது நம்பிக்கை பிறந்தது‌. மூன்று கப்பல்களையும் , பயணத்திற்குப் தேவையான உணவுப்  பொருள்களையும் தந்து உதவினாள். கப்பலைச் செலுத்த மாலுமிகள் வேண்டுமே!. யாரும் வரத்தயாராக இல்லை. ஆனாலும் கொலம்பஸ் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. சிறைக் கைதிகளை, மரணத்தின் விளிம்பில் நின்ற குற்றவாளிகளை, கொள்ளைக்காரர்களை  அழைத்துப்போக விரும்பினார். எதிர்பார்த்த மரணம், அல்லது எதிர்பாராத மரணம்  என்பதைவிட  பயணம் பரவாயில்லை என்று முடிவு செய்து எண்பத்தேழு தண்டனையாளர்களை உடன் அழைத்துக் கொண்டு கொலம்பஸ் கப்பல் பயணித்தது. தண்டனை பெற்றவர்களை அழைத்துப் போவது எத்தனை கொடிய தண்டனை. கொலம்பஸ் அசரவில்லை.

காற்றையும் கடலையும் கிழித்துக் கொண்டு அவனது கனவுகளின் நினைவான கப்பல் கரையில் இருந்து மறைந்தது. அடுத்த குழப்பம் உருவானது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடைய புறப்பட்ட பயணம் தவறாக மேற்கே நோக்கி நிகழ்ந்துவிட்டது. அந்த தவறுதான்  ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது.

வீரர்களையும் தீரர்களையும் கடவுள் கைவிடுவதில்லை   என்பது  உண்மையாயிற்று. நம்பிக்கை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது நிரூபணமாயிற்று. மேற்கு நோக்கிய தவறான பயணம்தான் அமெரிக்காவைத் கண்டுபிடிக்கக் காரணம் ஆயிற்று. ஏழை நெசவாளியின் கனவும் நனவும் நிஜமாகி அமெரிக்கா அவன் வசப்பட்டது. அடடா கொலம்பஸ் அமெரிக்காவைத் கண்டுபிடித்த மாதிரி இனி பூமியில் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது. ஐந்து கண்டங்களும்  அதற்குள் உறங்கும்  எண்ணெய் நிலக்கரி  வைரம் உட்பட அனைத்தையும், அமெரிக்காவின்  சாட்டிலைட்களைக் கண்டு பிடித்த பிறகும்  இனி என்ன இருக்கு என்று யோசிக்கிறீர்களா?.கொலம்பஸ் அமெரிக்கா கண்டுபிடித்ததைப் போல்  உங்களுக்கும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி  ஒளிந்திருக்கும்.

மறைந்திருக்கும்  அந்த கொலம்பஸை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாமா? கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவைக் கண்டு பிடிக்க வேண்டாம். உங்களுக்குள்ளே இருக்கும் கொலம்பஸைக் கண்டு பிடியுங்கள். வெற்றி நிச்சயம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT