Motivation article Image credit - pixabay
Motivation

விரக்தியை விரட்டுங்கள்!

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

றைவனும் தாய் தந்தையரும் நமது மதிப்பிற் குரியவர்கள்.  நம் வணக்கத்திற்குரியவர்கள். நம் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் படைத்த அருளிய இந்த உயிரை ஏதோ பிறந்தோம் என்று வெறுப்போடு நாம் நினைப்பதும் சொல்வதும் மிகப்பெரிய தவறு. அவர்கள் நமக்கு தந்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்தி முடிந்த வரையில் சாதனைகளை செய்து வாழ வேண்டியது நமது கடமை. 

அப்போதுதான் நாம் அவர்களுக்கு உண்மையானவர் களாக இருப்பதாக அர்த்தம். இல்லை என்றால் அவர்களை மதிக்காமல் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகத் தான் பொருள்படும். அதேபோல ஏதோ வளர்ந்தோம் என்று அழுத்து கொள்வதும் சரியல்ல. நம்மை கஷ்டப்பட்டு தாய், தந்தையர் வளர்த்துள்ளார்கள். அவர்கள் பிரதிபலன் எதையும் எதிர்பார்த்து வளர்க்கவில்லை. கடனே! என்றும் வளர்க்கவில்லை. ஆசை ஆசையாக நம்மை வளர்த்திருக்கிறார்கள்.

நமது ஒவ்வொரு இன்ப துன்பத்திலும் அவர்கள் தங்களை பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஏதோ வளர்ந்தோம் என்ற மனப்பான்மை நம்மிடம் எழுவதே மிகப்பெரிய தவறு .அதேபோல வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைப்பதும் தவறு. நாம் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். இந்த சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டியது கட்டாயம். கடமையும் கூட. இதன் கட்டமைப்பு வளர்ச்சி ஒழுக்கம், கட்டுப்பாடு என்று அனைத்து நிலைகளிலும் நமது பங்களிப்பை நாம் அளித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். அதனை அத்தனை எளிதாக புறக்கணிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

இதற்கெல்லாம் மேலாக பெரும்பாலோர் இன்னொன்று கூறுகின்றனர். எல்லாரும் என்றாவது ஒருநாள் சாக வேண்டியதுதானே என்று விரக்தியுடன் கூறி திரிகின்றனர். அது உண்மைதான். மனிதன் பிறக்கும்போதே அவனுக்கு இறப்பு உறுதி செய்யப்படுவது இயற்கைதான். ஆனால் அது எப்போது நிகழும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். அதற்கான உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. உயரிய சக்தி படைத்த இறைவனின் இந்த உரிமையை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் அற்ப மனிதர்கள் யாருக்குமே கிடையாது.

"எனது’ நான்" என்ற எண்ணங்கள் இருக்கிற வரையில் கவலைகளும் மன அழுத்தங்களும் நிறைந்து ஒருவனை விரக்தியின் விளிம்புக்கு தள்ளிவிடுகிறது. அதனால் நிம்மதியாக ஒரு செயலைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது. எனவே வெற்றிப் படிகளில் ஏறுவதற்கு பதிலாக விரக்தி என்ற பள்ளங்களில் இறங்கிக்கொண்டே போகின்றான் என்று ஒரு ஞானி கூறி இருக்கிறார்.  

இந்த உண்மைகளை புரிந்து கொண்டு கவலை என்னும் குப்பைகளை முதலில் கழிவறையில் கொண்டிபோய் கொட்டுங்கள். இவ்வாறு மனச்சுமைகளை இறக்கி விட்டாலே மனம் லேசாகி போகும். காற்று போல கனமில்லாமல் இருக்கும். ஆனந்தமாய் பறந்து விளையாடத் துடிக்கும். இந்த நிலையை அடைந்து விட்டாலே விரக்தி என்ற அரக்கன் உங்கள் அருகில் வருவதற்கு தயங்குவான். அச்சப்படுவான். ஓடிவிடுவான். விரக்தியை ஓட ஓட விரட்டி மனதை சிறகை விரித்து பறக்க வைக்கலாம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT