In own experience 
Motivation

சொந்த அனுபவத்தில் இருந்துதான் தன்னம்பிக்கை பெற முடியும்!

பிருந்தா நடராஜன்

Self confidence is the most powerful and beautiful thing you can possess. உங்கள் மீது நம்பிக்கை வைத்துதான் பாருங்களேன். வெற்றி உங்கள் பக்கம் கண்டிப்பாக வரும். சந்தேகம் இல்லை .

தன்னம்பிக்கையே வெற்றியின் திறவுகோல். அதாவது சாவி. தன்னம்பிக்கை என்ற சாவி வைத்து வெற்றி எனும் கனியை எட்டிப் பறித்து விடலாம். படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலக வேலை செய்பவர்கள் தன்னம்பிக்கை காரணமாக மிக சிறந்த முடிவுகளை எடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

இப்படி தன்னம்பிக்கையுடன் ஒரு முடிவு எடுத்து செயலை ஆரம்பிக்கும்போது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காட்டுகிறது. இதனால் வெற்றிக்கான வழியும் தென்படுகிறது. தன்னையே நம்பாத ஒருவர் வெற்றிக்கான முதல் படியைக்கூட தொட முடியாது.

தோல்வி பல விமர்சனங்களைத் தரும். அத்தனையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை உள்ளவர்கள் கடின உழைப்பாளிகள் மட்டும் அல்ல. புத்திசாலிகள். வெற்றிப் பாதையில் நடந்து செல்ல மற்றவர்கள் உதவியை நாட மாட்டார்கள். அதற்காக எதிலும் அதீத நம்பிக்கை அதாவது over confidence தேவையில்லை. அதுவும் மோசமான முடிவுகளை எடுக்க வைக்கும். நிதானமாக இருப்பது மிகவும் அவசியம்.

தன்னம்பிக்கை தேவை. அது அதீத நம்பிக்கையாக மாறாமல் கவனமாக கையாள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளைப் பார்த்தால்தான் தெரியும் அவர்கள் வெற்றிக்கு காரணம் அவர்கள் தன்னம்பிக்கை என்று. அதீத நம்பிக்கை அல்ல என்று.

நம் செயலின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை. எந்த ஒரு செயலைத் தொடங்கும்போதும் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் மட்டுமே செயல்பட வேண்டும்..

தன்னம்பிக்கையோடு ஒரு செயலைச் செய்ய மன உடல் ஆரோக்கியம் இரண்டும் அவசியம். இரண்டும் இருந்தால் நம் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் முடிவு எடுக்கும் திறன் தானாகவே வரும்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் எப்போதும் மனச்சோர்வுடன் இருப்பார்கள். எந்த ஒரு செயலைத் தொடங்கும் தைரியம் இல்லாமல் தயங்குவார்கள் மற்றவர்கள் உதவியை நாடி இருப்பதை காணலாம்.

தயவுசெய்து மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து சோர்ந்து போகாமல் இருக்க பழகுங்கள். அவர்கள் வெற்றிக்கு கையாண்ட யுக்தியை நீங்கள் செயல்படுத்தலாம். அதில் தவறில்லை.

மனம் ஒரு நிலையில் இருக்க தன்னம்பிக்கை வளர உடல் ஆரோக்கியம் முக்கியமான ஒன்று. சரியான உணவு, உடற்பயிற்சி, சரியான தூக்கம் போன்றவற்றில் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்போது மனதில் தன்னம்பிக்கை தானாகவே வரும்..

நாம் நமது சொந்த அனுபவத்தில் இருந்துதான் தன்னம்பிக்கை பெற முடியும். இது ஒன்றும் மாயாஜாலம் அல்ல. நினைத்தவுடன் கையில் கிடைப்பதற்கு. படிப்படியாக செயல்கள் செய்து தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் வெற்றி நிச்சயம்.

நிலவில் எரிமலைகளைக் கண்டுபிடித்த சீனா… எதிர்காலக் கனவு பலிக்குமா? 

தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

சமுத்திரத்தில் வாழும் அதிசய பாலூட்டி விலங்கு கடல் பசு!

சமூக மாற்றத்தில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு!

இது மட்டும் தெரிந்தால், உங்க கார் இருக்கைகளைப் பார்த்தாலே பயப்படுவீங்க! 

SCROLL FOR NEXT