அடைவதில் மட்டும்தான் நிம்மதி என்பது கிடையாது. சிலவற்றை இழந்தால் கூட நிம்மதி கிடைக்கும். ஏதோ ஒன்றை அடைவதில் மட்டும்தான் நிம்மதி கிடைக்கும் என்று எண்ணாதீர்கள். சிலவற்றை இழந்தால் கூட நிம்மதி கிடைக்கும். இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதுதான் நிம்மதி. இருப்பதை விட்டு விட்டு இல்லாததை வேண்டி நிற்பதால் நம் நிம்மதி தொலைகிறது. எல்லாவற்றிற்கும் நம் மனம் தான் காரணம்.
நிம்மதி என்பது எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை என்று கூறலாம். தேவையற்ற எண்ணங்களையும் வருத்தங்களையும் சுமந்து கொண்டிருந்தால் நிம்மதி கிடைக்காது. அதனால்தான் அடைவதில் மட்டும்தான் நிம்மதி இருக்கிறது என்பது கிடையாது வருத்தம், ஏமாற்றம் போன்ற தேவையற்ற சிலவற்றை இழந்தால் கூட நிம்மதி கிடைக்கும்.
நமக்கான வாழ்க்கை இது. நன்மையோ தீமையோ நாமே நம் வழியை தேர்ந்தெடுக்கலாம். பயம், கவலை, சோகம், வறுமை, விரக்தி, சோர்வு போன்றவற்றை இழந்துவிட நிம்மதி கிடைக்கும். அடைவதில் மட்டும்தான் நிம்மதி என்பது கிடையாது. கவலையும் பயமும் நிம்மதியின் எதிரிகள். அவற்றை இழந்தால் கூட நிம்மதி கிடைக்கும்.
சிலருக்கு வேண்டியது கிடைத்தால் நிம்மதி, சிலருக்கோ நண்பருடன் வெளியில் சென்றால் நிம்மதி மற்றும் சிலருக்கு தனியாக இருந்தால் நிம்மதி என எண்ணுகிறார்கள்.
வாழ்க்கையில் அளவுக்கு மீறிய பற்றை வளர்த்துக் கொள்ளலாகாது. குவிந்த செல்வம் குறைந்து போகும். உயர்ந்த வாழ்வு தாழ்ந்து போகும். சேர்ந்த சுற்றம் பிரிந்து போகும். பற்றுகளில் இருந்து விடுபட மனிதன் மனதை பக்குவப்படுத்த வேண்டும் என்று "மகாபாரதம்" கூறுகிறது.
அடைவதில் மட்டும்தான் நிம்மதி என்பது கிடையாது. சிலவற்றை இழந்தால் கூட நிம்மதிதான். பொருட்களின் மீது உள்ள அதிகப்படியான பற்றை இழப்பது நிம்மதியைத்தரும். வாழ்வில் கோபத்தை இழப்பதும், பயத்தை இழப்பதும் கூட நிம்மதியைத் தரும்.
ஆசையின் வேகம் பெருகி பற்றாய் உருமாறி, தனக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்ற தவிப்பில் மனம் உறக்கம் இன்றி தவிக்கும். ஒரு வேளை விரும்பிய பொருள் கிடைக்கவில்லை என்றால் அந்த ஏக்கமே நம்மை வாட்டி எடுத்துவிடும். எங்கே அது கைநழுவி போய்விடுமோ என்ற அச்சத்தில் மனம் கவலை கொள்ளும். இந்த கவலைதான் கோபமாக மாறும். கோபம் பகையை உருவாக்கும். முடிவில் மன நிம்மதியை இழக்க நேரிடும். எனவே அடைவதில் மட்டும்தான் நிம்மதி என்பது கிடையாது. சிலவற்றை இழப்பதும் கூட நிம்மதிதான்.
பெரிய பணக்காரன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க பரமஹம்சர் ஏற்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்த "சரி உன் மன நிம்மதிக்காக வாங்கிக் கொள்கிறேன். இதை நான் விரும்பியபடி செலவழிக்க தடை இல்லையே" என்று கேட்க அதற்கு செல்வந்தனும் ஒப்புக் கொள்ள "ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கை கரையில் எறிந்து விட்டு வா" என்று கூறுகிறார்.
அதிர்ந்து போன பணக்காரன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து மனம் இல்லாமல் நீரில் எரிந்தபடி நின்றான். அங்கு வந்த பரமஹம்சர், "என்ன முட்டாள்தனம் ஒரேடியாக வீசி எரிந்துவிட்டு விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக வீசுகிறாய்" எனக் கேட்க "நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் எரிந்து விட மனம் வரவில்லை. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிகிறேன்" என்று கூற பரமஹம்சர் இழப்பதற்கு முடிவெடுத்துவிட்டால் ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும் என்று கூறுகிறார். நம்மால் இந்த பணக்காரனைப்போல் ஒவ்வொன்றாக இழப்பதற்கு கூட மனம் வருவதில்லையே.
என்ன நான் சொல்வது சரிதானே!