Success IMG Credit: Freepik
Motivation

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த நான்கும் தேவை!

இந்திராணி தங்கவேல்

உழைப்பும், பயிற்சியும், முயற்சியும், உறுதியும் படைத்தவர்களுக்கு வெற்றி உண்டு!

நியூயார்க்கில் கார்னகி ஹால் என்றோர் இடம் உண்டு. அங்கே புகழ்பெற்ற வயலின் கலைஞர்கள் வயலின் நிகழ்ச்சிகளை நடத்துவர்.

நியூயார்க்கிற்குப் புதிதாக வந்த இளம் வயலின் கலைஞர் ஒருவர் கையில் வயலினைத் தூக்கிக்கொண்டு நியூயார்க்கின் காவலர் ஒருவரை அணுகி, ஐயா! கார்னகி ஹாலுக்கு எப்படிப் போக வேண்டும்? என்று கேட்டார்.

அந்தக் காவலர் புன்னகைத்து 'நன்கு பயிற்சி செய்து கொண்டு போக வேண்டும் !'என்று சொன்னார்.

பயிற்சி தானே பலம்!

உலக சரித்திரத்தில் காணப்படும் பெரும் காரியங்கள் எல்லாம் உழைப்பு ,பயிற்சி, முயற்சி ஆகியவற்றின் மூலம் கிடைத்த உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே ஆகும். உங்களிடம் சோம்பல் இருந்தால் அனைத்து செயல்களும் கடினமாகும்.

பயிற்சியும், முயற்சியும், உழைப்பும் இருந்தால் அனைத்து செயல்களும் எளிதாகும் என்பதற்கு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை மற்றொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதோ அது:

சீனாவில் உள்ள சாங் நகரில் நான்காவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன .இதில் இந்தியாவின் 16 வயது ஷீத்தல் தேவி வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஷீத்தல் தேவி ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் .பிறவிக் குறைபாடு காரணமாக அவரின் இரண்டு கரங்களும் இயல்பான வளர்ச்சியைப் பெறவில்லை. வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு கைகள் முக்கியம் .ஆனால், ஷீத்தல் தேவி தன்னம்பிக்கை இழக்காமல் கால்களால் வில்லைப் பிடித்து பயிற்சி எடுத்து அம்பைக் குறி பார்த்துத் தொடுத்து சாதனை புரிந்துள்ளார் .பிறவி குறைபாடு கொண்ட இந்தியாவின் முதல் வில்வித்தை வீராங்கனை இவர் தான். மிகவும் கடினப்பட்டு ஒரு நாளில் நூறு அம்புகளைத் தொடுத்து பயிற்சி பெற்று, இப்போது தங்கமங்கையாக இந்தியாவுக்கு மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார் .கைகளை இழந்தாலும் ,தன்னம்பிக்கை இழக்காமல், 'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை'. என்று சாதித்துக் காட்டியுள்ளார்.

பயிற்சியும் ,விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு இவர்கள் எல்லாம் ஒரு சாட்சி.

சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்துகொண்டது: "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது கொடியை உயர்த்திய வீரர்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் சிறந்து விளங்கும் உண்மையான பிரதிநிதித்துவம் ஆகும். இங்கே நாம் மகத்துவத்தின் இடைவிடாத நாட்டத்தையும் வெற்றியையும் கொண்டாடுவோம்".

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT