நம்மில் பலருக்கு பிறரை அவமானப்படுத்துவது என்றால் அலாதி பிரியம். என்ன நடந்து விடப்போகிறது என்ற நினைப்பு மனதுக்குள் எப்போதும் இருக்கும். நான் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம் என்பதை பின்னால் அறிந்து கொண்டு வருத்தப்படுவோம்.
பிறரும் நம்மை போல் ஒரு ஜீவன்தானே அவர்கள் சிறு தவறு செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் உங்களிடம் அன்பாக பழகி தவறை கூட சுட்டி காட்டினால் தவறு இல்லை அவமானப்படுத்துவது அசிங்கப்படுத்துவதுதான் மிகப்பெரிய தவறு.
பிறரை அவமானப்படுத்துதல் பிறரை அவமானப் படுத்துவது என்பது உங்களின் சிந்தனை, குணாதிசயம் எதிர்மறை வழியில் செல்வது என்றும், உங்களை மற்றவர்களிடம் இருந்து தூரப்படுத்தும் செயல் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் பிறரை காயப்படுத்துவதாகவும், பாதுகாப்பின்மை, சொந்த எண்ணங்களை கையாளத் தெரியாதை இவ்வாறு வெறுப்பாக வெளிப்படுமாம்.
பிறரை மதிக்க தெரியாதவர்களிடம் நல்ல குணம் இருப்பதில்லை. நீங்கள் பிறரை அவமானப் படுத்தும்போது, அன்புரிக்குரியவர்களும் காயப்படுவார்கள். மற்றவர்களை அவமானப்படுத்தும் போது உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஆக்கிரமித்து பழிவாங்கும் உணர்ச்சிகள் கூட மேலோங்க வாய்ப்பு இருக்கிறது.
பிறரை காயப்படுத்திக் கொண்டே இருந்தால் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட உங்களால் பாதிக்கப் பட்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் அன்பு என்ற ஒன்று உங்களை விட்டு நீண்ட தூரம் விலகி சென்று இருக்கும்.
அன்பு, பிறரின் ஆசைகளுக்கு மதிப்பளித்தல், சகோதரத்துவம் எல்லாம் காணாமல் போய் இருக்கும். இந்த உன்னத உணர்வுகள் உங்களுக்கு என்னவென்றே தெரியாமல்போகக் கூட வாய்ப்பு இருக்கிறது.
அதனால் பிறரை எப்போதும் காயப்படுத்த வேண்டும் என நினைக்காதீர்கள். காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்தவே வேண்டாம். இக்கட்டான சூழல்களில் இருக்கும்போது அமைதியை கடைபிடிக்கவும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.