விவேகானந்தர்... 
Motivation

வெற்றிக்கு விவேகானந்தர் காட்டிய 20 வழிகள்!

சேலம் சுபா

ரு நாட்டின் வளமான எதிர்காலம் இளைஞர்களிடமே உள்ளது என்பார்கள். இளைஞர்களின் வழிகாட்டியாக வாழ்ந்து நம் மனங்களில் வாழும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கடைப்பிடிக்கிறோம். இளைஞர்களின  வெற்றிக்காக அவர் உதிர்த்த ஆலோசனைகளில் முக்கியமான தொகுப்பு இங்கே.

1. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

2. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

3. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

4. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

5. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது. தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

6. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

7. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றது ஆகிவிடும்.

8. வ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

9. ன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

10. நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே. குறை சொல்லாதே . குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே

11. ன் மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.

12. ன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறுகளே உலக சரித்திரமாகும்.

13. ளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்த போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

14. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய். (ஆனால் முயற்சி தேவை)

15. ன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளையே உள்ளன அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து.

16. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றி அமையாதவை ஆகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

17. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருந்திருத்தல் வேண்டும். அந்த குணங்கள்தான் அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணம்.

18. ணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம், முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

19. டலை கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும், மலைகளையே தொலைத்துச் செல்லும் வலிமையான தோள்களுமே நமக்குத் தேவை. வலிமைதான் வாழ்வு. பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

20. ரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

Goblin Shark: The 'Living Fossil'

சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

SCROLL FOR NEXT