why many people are unable to enjoy life? 
Motivation

ஏன் பலரால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடிவதில்லை தெரியுமா? 

கிரி கணபதி

வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம் போன்றது. இந்த பயணத்தில் பலவிதமான அனுபவங்கள், உணர்வுகள் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. ஆனால், பலர் இந்த அற்புதமான பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

வாழ்க்கையை அனுபவிக்க முடியாத அதற்கான காரணங்கள்: 

நவீன வாழ்க்கை முறை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. வேலை, குடும்பம் பொருளாதார நிலமை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு, பலர் தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். 

புதிய விஷயங்களை முயற்சி செய்யாமல் இருப்பது, தோல்வியைக் கண்டு அஞ்சுதல் போன்றவை வாழ்க்கை பற்றிய புரிதலை பலருக்கு ஏற்படுத்துவதில்லை. மேலும், எதிர்மறை எண்ணங்களால் மனதை நிரப்பி, நேர்மறையான எண்ணங்களை அனுபவிக்காமலேயே போய் விடுகின்றனர். 

மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு பலர் தங்களின் மன அமைதியை கெடுத்துக் கொள்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறது. வாழ்க்கையில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் மீது கவனம் செலுத்தாமல், பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கவிடாமல் செய்கிறது. 

சிலர் கடந்த காலத்தில் நடந்த தவறுகளைப் பற்றி அதிகமாக வருந்தி, நிகழ்காலத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்களை அனுபவிக்காமல் போய்விடுகின்றனர். மேலும், சிலர் எதிர்காலத்தைப் பற்றி தேவையில்லாமல் அதிகமாக கவலைப்பட்டு தற்போதைய நேரத்தை வீணடிக்கின்றனர். 

இது தவிர, குடும்ப பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சனைகள் போன்றவற்றால் பலரால் தங்களின் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமலேயே போய்விடுகிறது. 

வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான பரிசு. இந்த பரிசை முழுமையாக அனுபவிக்க பல வழிகள் உள்ளன. நாம் நம்முடைய மனதை மாற்றிக் கொண்டு, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றவர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட எளிய மாற்றங்கள் நம் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும். 

சில அனுபவங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், சில அனுபவங்கள் துக்கத்தைத் தரும். ஆனால், எந்த அனுபவமும் நிரந்தரமானது அல்ல. எனவே, ஒவ்வொரு நாளையும் புதிய தொடக்கமாகக் கருதி வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT