Wilson's Law 
Motivation

Wilson's Law: அறிவை வளர்த்துக்கொள், பணம் தானாக வரும்!

கிரி கணபதி

இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது என்பது பலரின் இலக்காக உள்ளது. நல்ல வேலை, வசதியான வாழ்க்கை, எதிர்காலத்திற்கான பாதுகாப்பு போன்றவை அதிக பணம் சம்பாதிப்பதால் கிடைக்கிறது. இந்த இலக்கை அடைய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் Wilson's விதியைப் பின்பற்றுவது.

Wilson's Law என்றால் என்ன?

அறிவுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் முன்னுரிமை கொடுத்தால், பணம் தானாக வரும் என்பதைக் கூறும் கொள்கைதான் Wilson's Law. தொடர்ந்து பல விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலமும், தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலமும் நீங்கள் நிதி இலக்குகளை எளிதாக அடையலாம் என்பதை வில்சன் விதி நம்புகிறது. பணத்தைவிட உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை இது எடுத்துரைக்கிறது.

Wilson's Law-ஐ எவ்வாறு செயல்படுத்துவது:

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், உங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கும் எப்போதும் நேரம் ஒதுக்குங்கள். புத்தகங்கள் படியுங்கள், பிறருக்கு சொல்லிக் கொடுங்கள், ஆன்லைன் கோர்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் மேம்பட விரும்பும் துறையின் நிபுணர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் துறையில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தேடுங்கள். நீங்கள் விரும்பும் வேலையை செய்தால் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

முக்கியமான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிறருடன் தொடர்புகொள்ளும் திறன், க்ரிட்டிக்கல் திங்கிங், தகவல் தொழில்நுட்பத் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலமாக, நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நீங்கள் முன்னேற நினைக்கும் துறையில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும், மற்றவர்களிடமிருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தொழிலில் முன்னேறவும் உதவும்.

தொழில் உலகம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, மாறிவரும் உலகிற்கு ஏற்ப புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும். உங்கள் திறன்களை மாற்றி அமைக்க எப்போதும் தயாராக இருங்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு தேவையான மாற்றங்களை செய்ய தயாராக இருங்கள்.

 இத்தகைய விஷயங்களை நீங்கள் முறையாக கடைப்பிடித்து, உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள முனைப்பு காட்டினால், பணம் என்பது தானாக உங்களை வந்தடையும். கடின உழைப்பை மட்டுமே நம்பாமல், திறமையுடன் கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்துங்கள். இதுதான் உங்களுக்கான நிதி இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT