ஆண்ட்ரூ கார்னகி 1848 ஆம் ஆண்டு தனது பெயரில் ஒரு டாலருடன் அமெரிக்காவிற்கு சென்றார். 1901 ஆம் ஆண்டு அவர் எஃகு சாம்ராஜ்யத்தின் தலைவராகவும், உலகின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருந்தார்.
ஆண்ட்ரூ கார்னகி தனது எஃகு வணிகத்தை அமெரிக்க ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்றபோது அவர் உலகில் பணக்காரர்களில் ஒருவரானார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு தனது செல்வத்தை பயன்படுத்தினார். அதில் பெரும்பகுதி பல நகரங்களிலும் நூலகங்கள் கட்ட பணம் செலுத்தப்பட்டது. இது உழைக்கும் மக்களுக்கு அறிவு மற்றும் தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையான பிற ஆதாரங்களுக்கு அணுகலை கொடுக்கும் என கார்னகி நம்பினார்.
வெற்றியாளர்களின் கதைகளை அறிவதில் ஆர்வமுள்ள “நெப்போலியன் ஹில்” என்ற இளம் பத்திரிகையாளர் 1908 ல் ஆண்ட்ரூ கார்னகியை அணுகி அவரது புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஆக்கிய அனைத்து உத்திகளையும் அறிந்து அவற்றை ஆவணப்படுத்த முடிவு செய்தார்.
ஹில் தனது வாழ்க்கை வெற்றியைப் பற்றி எழுத தொடங்கியபோது கார்னகி தனது வெற்றிக்கான 10 விதிகளை அவருக்கு வழங்கினார். இது ஹில்லின் பெரும்பாலான படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. விதிகளின் சுருக்கம் “வெற்றியின் அறிவியல்” தொகுப்பில் உள்ளது.
1. உங்கள் நோக்கத்தை வரையறுக்கவும்: செயல் திட்டத்தை உருவாக்கி உடனடியாக அதை நோக்கி செயல்பட தொடங்குங்கள்.
2. மாஸ்டர் மைண்ட் கூட்டணியை உருவாக்கவும்: உங்களிடம் இல்லாததை இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு வேலை செய்யுங்கள். என்று ஹில் கூறுகிறார்.
3. கூடுதல் மைல் செல்லுங்கள்: நீங்கள் செய்ய வேண்டியதை விட அதிகமாக செய்வது மட்டுமே உயர்வுகள் அல்லது பதவி உயர்வுகள் நியாயப்படுத்துகிறது. மேலும் மக்களை உங்கள் கடமையின் கீழ் வைக்கிறது என்று ஹில் எழுதுகிறார்.
4. பயன்படுத்த பட்ட நம்பிக்கை பயிற்சி: உங்களையும் உங்கள் நோக்கத்தையும் முழுமையாக நம்புங்கள். அப்போது நீங்கள் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
5. தனிப்பட்ட முன் முயற்சி வேண்டும்: சொல்லாமல் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.
6. உங்கள் கற்பனையில் ஈடுபடுங்கள்: ஏற்கனவே செய்ததை தாண்டி சிந்திக்க தைரியம் கொள்ளுங்கள்.
7. உற்சாகம் செலுத்துங்கள்: நேர் மறையான அணுகுமுறை உங்களை வெற்றிக்காக அமைத்து மற்றவர்களிடம் மரியாதையை வெல்லும்.
8. துல்லியமாக சிந்தியுங்கள்: ஹில்லின் வார்த்தைகளில் துல்லியமான சிந்தனை என்பது “உண்மைகளை புனைகதைகளில் இருந்து பிரிக்கும் திறன் மற்றும் உங்கள் சொந்த கவலைகள் அல்லது பிரச்னைகளுக்கு பொருத்தமானவற்றை பயன்படுத்துதல்.”
9. உங்கள் முயற்சியை ஒருமுகப் படுத்துங்கள்: நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கியமான பணியிலிருந்து திசை திருப்பவேண்டாம்.
10. துன்பத்தில் இருந்து லாபம்: “ஒவ்வொரு பின்னடைவிற்கும் சமமான பலன் உள்ளது. என்று ஹில் எழுதுகிறார்.
ஹில்லின் 1937 ல் எழுதிய புத்தகம் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” எல்லா காலத்திலும் விற்பனை ஆகும் புத்தகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆண்ட்ரூ கார்னகி நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கச்சேரி அரங்குகள், கல்லூரிகள் மற்றும் பலவற்றை நிறுவினார். கார்னகி ஹால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் கலாச்சார அடையாளத்திற்காக ஒரு நங்கூரமாக இருந்தது மற்றும் உலகின் மிக முக்கியமான கட்டடங்களில் ஒன்றாக மாறியது.
தனது செல்வத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக அளித்தார். அதில் நியூ யார்க் கார்னகி கார்ப்பரேஷன் உருவானது. இது ஒரு புதிய வடிவத்தை உருவாக்கி இன்று வரை தொடர்கிறது.