Dark Tourism 
பயணம்

Dark Tourism - அது என்ன இருண்ட சுற்றுலா? பேய் பிசாசுகள் வாழும் இடங்களோ?

மதுவந்தி

குடும்பமாகவோ, நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ சென்று மனதை ரிலாக்ஸ் செய்யவே நாம் சுற்றுலா செல்கிறோம். ரம்மியமான காட்சிகள், மனதை மயக்கும் சூழ்நிலை, மேலிருந்து கொட்டும் அருவிகள், கடல் அலைகள், அமைதியான மலை முகடு போன்றவை சுற்றுலாவின் சிறப்பம்சம். 

இருண்ட சுற்றுலா அல்லது துயர சுற்றுலா என்பது தற்பொழுது அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அது என்ன இருண்ட சுற்றுலா? சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நிகழ்ந்த இடங்கள், யுத்தம் போன்ற துயரங்கள் மற்றும் மரணம் தொடர்புடைய சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் நிகழ்ந்த இடங்களைக் காண்பதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பேராசிரியர்கள் J. John Lennon மற்றும் Malcolm Foley என்பவர்கள் 1996 ஆம் ஆண்டு இந்த வகை சுற்றுலாக்களுக்கு 'இருண்ட சுற்றுலா' எனப் பெயர் வைத்தனர்.

இதில் ஏழு வகை உள்ளது - யுத்தம் அல்லது போர்க்களம், பேரிடர், சிறை, சுடுகாடு அல்லது இடுகாடு, பேய்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், ஹோலோகாஸ்ட் எனப்படும் நெருப்பினால் அழிந்த இடங்கள்/கட்டிடங்கள் ஆகியவை இருண்ட சுற்றுலாவின் கீழ் வரும்.

உதாரணத்திற்கு இந்தியாவில் ஜாலியன் வாளா பாக், அந்தமான் சிறைச்சாலை, புஜ், குல்தாரா கிராமம், டூமாஸ் கடற்கரை, பாங்கர் கோட்டை, ரூப்குந்து ஏறிப் போன்ற இடங்கள் இருண்ட சுற்றுலாவுக்குப் பெயர்போன இடங்களாகும். 

இது சமீப காலங்களில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம், அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது, இதனால் ஏற்படும் அனுபவங்களின் தாக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இதற்குக் காரணம்.

இந்த வகை சுற்றுலாக்களை ஒரு சாரார் ஆதரித்தும் ஒருசாரார் எதிர்த்தும் வருகின்றனர். இதனைச் சரி என்று சொல்பவர்களைப் பொறுத்தவரை இவ்வாறு சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்ப்பது பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவது போல் ஆகும், அவ்வாறே இந்த வகை சுற்றுலாவினால் ஏற்படும் அனுபவ அறிவும், எச்சரிக்கை உணர்வும் அதிகம், இதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது, இதிலிருந்து நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என மக்கள் கூறுவதாகத் தெரிகின்றது.

ஆனால் இந்த வகை சுற்றுலாக்களை எதிர்ப்பவர்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா மூலமாக வருமானம் ஈட்ட நினைப்பது இறந்தவர்களை அவமதிப்பது போல் ஆகும் எனக் கருதுகிறார்கள். அதே போல் ஒரு சிலருக்கு மன அழுத்தம் கூடுதலாகவும் வாய்ப்பு அதிகம், அவர்களின் எண்ண ஓட்டத்தில் இதன் தாக்கமும் அகிதம் ஆக வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலும் சுகாதாரமற்று இருக்கவும், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படிப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள் அங்குச் சென்று, அந்த இடத்தின் தன்மையைப் பொறுத்து மக்களின் உணர்ச்சிகளை மனதில் கொண்டு அதனைக் களங்கப்படுத்தாமல் வருவது நன்மை பயக்கும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT