எண்கள் என்பது நமது வாழ்வின் அனைத்திலும் தவிர்க்க முடியாத கணக்கின் அடிப்படை. இந்த எண்களின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் பல இடங்கள் உலகின் பல பகுதிகளில் உண்டு. அவை அந்தப் பகுதிகள் அமைந்துள்ள புவியியல் இருப்பிட ரீதியாக குறிப்பிடப் படுவதோடு வியக்கத்தக்க சில சுவாரசியமான கதைப் பின்புலத்தையும் பெற்றிருக்கும்.அப்படி எண்களின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் இந்தியாவில் உள்ள சில இடங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல் இங்கு...
யூமே சாம்டாங் என்றும் அழைக்கப்படும் ஜீரோ பாயிண்ட் சராசரி கடல் மட்டத்திலிருந்து 15,300 அடி உயரத்தில் உள்ளது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்வதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், பார்வையாளர்கள் இங்கு வர அனுமதி தேவை. நிலப்பரப்பின்றி பனிக்கட்டிகள் பரவிய இடமாகவும் இருந்தாலும் மக்கள் நடமாட்டமின்றியும் இதையடுத்து சாலைகள் எதுவும் இல்லை என்பதாலும் இது ஜீரோ பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் பனி படர்ந்த மலைகள் மற்றும் அழகிய சுற்றுப்புறங்களின் காட்சிக்கு மத்தியில் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடமாகவும் உள்ளது.
செவன் சிஸ்டர் என்பது காங்டாக்கிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்டாக்-லாச்சுங் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். ஒரு பரந்த கரடுமுரடான குன்றின் மீது பக்கவாட்டாக இணக்கமாக அமைக்கப்பட்ட ஏழு வெவ்வேறு நீர்வீழ்ச்சிகள் தூரத்திலிருந்து பார்த்தால் தனித்தனியாகத் தோன்றும் வகையில் இருப்பது பிரமிக்க வைக்கும். இந்த நீர்வீழ்ச்சி சிரபுஞ்சியின் சிறப்பம் சங்களில் ஒன்றாகும். ஏழு பிரிவுகளாக பிரிந்து நீர்வீழ்ச்சியாக விழும் காரணத்தால் "ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி" என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமை சூழ்ந்த அழகுடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி பருவமழை காலங்களில் இன்னும் அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும்.
சதாரா தெஹ்சிலின் தலைநகரமே சதாரா மாவட்டமாகும். நகரைச் சுற்றி அமைந்துள்ள ஏழு கோட்டைகள் (சத்-தாரா) என்பதன் மூலம் இந்த நகரம் அதன் பெயரைப் பெற்றது. இந்த நகரம் சிப்பாய் நகரம் என்றும் ஓய்வூதியம் பெறுவோர் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டையகால மராட்டிய அரசின் முதல் தலைநகரம் என்று சிறப்பு உடைய இந்த நகரம் புனே மற்றும் மும்பையில் உள்ளவர்களுக்கு சதாரா சிறந்த பொழுதுபோக்கிடமாக உள்ளது.
பஞ்ச்கனி மகாராட்டிரத்தில் உள்ள சாத்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் நகராட்சி ஆகும். புனேவிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பஞ்சகனி என்றால் 5 கிராமங்களுக்கு இடையே உள்ள நிலம் என்று பொருள். மலைவாசாஸ்தனமாக மாறுவதற்கு முன்பு தண்டகேர், கோதாவரி, ஆம்ப்ரல், கிங்கர், தைகாட் ஆகிய ஐந்து கிராமங்களால் சூழப்பட்ட இடமாக இருந்ததால் பஞ்சகனி என்ற பெயரை பெற்றது . ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகையுடன் மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களைக் கொண்டதற்காகவும் அறியப்படுகிறது.
இது கேரளாவின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். அஷ்டமுடி என்பதற்கு எட்டு மகுடம் என்று மலையாளம் மொழியில் பொருள். (அஷ்டம்=எட்டு , முடி= மகுடம்) . இந்த ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும் என்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.மேலும் இது கேரளாவின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. 8 மணி நேர சொகுசு பயணம் இங்கு சுகம். இச்சொகுசுப் படகானது காயல்கள், மற்றும் கிராமங்களின் வழியாகச் செல்லுவதால் அக்கழிமுகத்தின் சுற்றுப்புறங்களை முழுவதும் ரசிக்க முடியும்.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் இடம்பிடித்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் உள்ள பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் என்பது நிச்சயம். உனக்கோடி என்று சொல்லுக்கு ஒரு கோடிக்கு குறைவானவர் என்ற பொருள் ஆன்மீக புராணங்களின்படி சிவன் (99 99 999 ) ஒரு கோடிக்கு ஒருவர் குறைவான எண்ணிக்கை கொண்ட சீடர்களுடன் காசிக்கு செல்லும் வழியில் அந்த இடத்தில் அனைவரும் ஓய்வெடுத்ததாகவும் மீண்டும் பயணத்தை தொடர அதிகாலையில் அனைவரையும் சிவன் எழுப்ப அதை மறுத்து சீடர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களை சாபமிட்டு கல்லாக மாற்றினார் என்ற கதை நிலவுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த ஏரி அமைதியான ஏரியாகும். இதன் அருகில் அமைந்திருக்கும் நைனிடால் , பீம்டால் போன்ற பிரபலமான ஏரிகளை போல இது இல்லை என்றாலும் இதன் அமைதியான அழகியல் அனைவரையும் ஈர்க்கும். 9 பக்கவாட்டுப் பகுதிகள் இந்த ஏரியை ஒருங்கிணைப்பதால் இந்த பெயரால் அழைக்கப் படுகிறது.