Surendrapuri 
பயணம்

சுரேந்திரபுரி போலாமா மக்களே! புராணக் கதைகளின் அருங்காட்சியகம்!

ராதா ரமேஷ்

நம்மை ஒரு புது உலகத்துக்கு அழைத்துச் சென்று திகிலூட்டக்கூடிய பல்வேறு காட்சிகளை கண் முன் கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வடிவமைப்புடன் இருக்கக்கூடிய  சுரேந்திரபுரி பயணத்தைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தெலுங்கானா மாநிலத்தில் புது திருப்பதி என்று அழைக்கப்படக்கூடிய யாதகிரி குட்டா கோவிலில் இருந்து  சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுரேந்திரபுரி. புராணக் கதைகளின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படக்கூடிய  இந்த அருங்காட்சியகம் சுமார் 17 கிலோ மீட்டர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Mythological museum of india என்று அழைக்கப்படக்கூடிய இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு புராண கதைகள் சிலைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சிங்க நுழைவு வாயில்:

கோவிலின் முன்புறத்தில் பிரம்மாண்டமாக பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் அதன் பின்புறம் பஞ்சமுக சிவபெருமான் சிலையும் தத்துரூபமாக பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில் அனைத்தும் சிங்கப்பற்களைக் கடந்து சிங்க வாய்க்குள் நுழைவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கத்தை அருகில் பார்க்கும் போது ஏற்படும் பிரமிப்பை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளின் அருகே செல்லும்போது உணரலாம்.

புராணக் கதைகள்:

நுழைவாயில் உள்ளே சென்றவுடன் ஒரு படகில் முனிவர்கள் மற்றும் விலங்குகள் ஆகியோர் உலகின் கடைசி பயணத்தை மேற்கொள்வதை வலியுறுத்தும் வகையில் மனு சரித்திர புராணக் கதை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே யானையின் காலை முதலை கவ்வுவது போன்றும், நீலமுகக் கண்ணன் மரத்தில் அமர்ந்து குழலிசைக்க , கோப்பியர்கள் நீராடுவது போலவும் தத்ரூபமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற கோவில்களின் மாதிரிகள்:

தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற கோவில் கோபுரங்களின் மாதிரிகளும், பல்வேறு கோவில்களின் கருவறையில் உள்ள தெய்வங்களான பத்மாவதி தாயார், அம்பிகை, வராக நரசிம்மர், காளஹஸ்தி போன்ற 100க்கும் மேற்பட்ட சிலைகளும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வட இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களின் கட்டிட கலையை விளக்கும் சாய்பாபா கோயில் போன்றவற்றின்  கோபுரங்களும் இங்கு மாதிரிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைலாய மலை சிவன்:

பலருக்கும் கைலாய மலையில் உள்ள சிவனை தரிசிப்பது என்பது மிகவும் விருப்பமான ஒன்று. இங்கே கைலாய  மலையில் சிவன் அமர்ந்திருப்பது போலவும், சிவனைச் சுற்றி  பார்வதி, விநாயகர், தேவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது போலவும் சிலைகள் அடிமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பனி லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் புராண காட்சிகளை விளக்கு வகையில் பல்வேறு சிலைகள்  வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ண வதம்:

சிங்க வாய்க்குள் அமைக்கப்பட்ட நுழைவாயிலை போல பாம்பு, முதலை போன்ற  சிலைகளின் வாய் பகுதி வழியாக பல்வேறு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு நுழைவாயிலுக்குள் சென்றால் கிருஷ்ணனின் லீலைகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிலைகளும், அசுரர்களை அழிக்கும் சிலைகளும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராட்சத கொக்காக வடிவம் கொண்ட நாகாசுரனை கிருஷ்ணர் கொல்வது போன்ற சிலைகளும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான விளையாட்டுகள்:

குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் பூதத்தின்  வாய் வழியாக  ஏறி காது வழியாக சறுக்குதல், மாடு சிலையிலிருந்து  பால் ஒழுகுதல் போன்ற பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாற்கடலை கடைதல்:

புராணக் கதைகளில்  நன்கு அறியப்பட்ட பாம்பை கயிறாகக்  கொண்டு பாற்கடலை கடைந்து  அமிர்தம் எடுக்கும் காட்சியும் இங்கு   தத்ரூபமாக  சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்ந்து மகாபாரத போர் காட்சிகள், அஷ்டலட்சுமி சிலைகள், கிருஷ்ணரின் உபதேசங்கள் போன்றவை பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட காட்சி:

வைகுண்ட சொர்க்கப்பாதை எப்படி இருக்கும் என்பதன் மாதிரிகளும் வைகுண்டத்தில் விஷ்ணு படுத்திருப்பது போலவும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவில் அனுமன் சிலையும் அனுமனின் பல்வேறு வீர சாகசங்களை விளக்கும் வகையிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எமலோகம்:

நம்மிடையே நிலவிவரும் பல்வேறு நம்பிக்கைகளில் ஒன்றான நரகம் எப்படி இருக்கும் என்பதையும்,அதில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றிய சிலைகளும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மிகவும் திகிலுட்டக் கூடியதாகவும் அதே சமயம் பயத்தை உண்டு பண்ணக் கூடியதாகவும்  உள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து பாதாள உலகம், பாதாள தேவ லோகம் என்று பழைய பேய் படங்களில் பார்ப்பது போன்று பல்வேறு வண்ண விளக்குகளுடன் திரைகளில்  பார்த்த சினிமாவை கண்முன் கொண்டு வரும் வகையில் பல்வேறு செட்டிங் அமைப்புகள்  இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

மகிஷாசுரமர்த்தினி:

12 கைகளுடன் கூடிய கம்பீரமான மகிஷாசுரமர்த்தினி, மஹிசனை வதம் செய்வது போன்ற சிலைகளும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அன்றைய காலகட்ட ராஜாக்கள் பயன்படுத்தியது போன்ற கம்பீரமான நாற்காலிகள், அன்னப்பறவை, சிங்கம், போன்ற  அமைப்புகள் மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஒரு புதுவிதமான பயணத்தை காட்ட விரும்புபவர்களும், சாகச பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களும்  தாராளமாக இந்த இடத்தை விசிட் செய்யலாம். திகிலூட்டக்கூடிய புதுமையான பல அனுபவங்கள் இங்கே காத்திருக்கின்றன!

வரலாற்றுச் சின்னம் நாமக்கல் கோட்டை பற்றி தெரியுமா?

இது மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சா தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

'Whale fall' என்றால் என்ன தெரியுமா?

Chewing gum Vs Bubble gum: எது அதிக நேரம் புத்துணர்ச்சி தரும் தெரியுமா?

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT