பயணம்

இரயில் பயணமும் பழைய பேப்பரும்!

கல்கி டெஸ்க்

* இரயிலில் பயணம் செய்யும்போது நமது பெட்டி இதர சாமான்களுடன், பழைய செய்தித்தாளை கொண்டு செல்ல சென்றால் இப்படியெல்லம் உதவுமே!

* இரவில் குழந்தைகள் படுப்பதற்கு போர்வை விரிப்பதற்கு முன்பாக பழைய பேப்பரைப் போட்டுக் கொள்ளலாம்.

* சாப்பிடும்போது நம் இருக்கை அழுக்காகாமல் இருக்க, பழைய பேப்பரை மேலே விரித்துச் சாப்பிடலாம்.

* சூட்கேஸ் அடிப்பாகம் பழுதடையாமல் இருக்க, பழைய பேப்பரை விரித்து அதன் மேல் சூட்கேஸ் வைக்கலாம்.

* தண்ணீர் இல்லாதபோது கையைச் சுத்தம் செய்ய பழைய பேப்பரை உபயோகிக்கலாம்.

பிரயாணம் செய்யும்போது கவனிக்க 6 விஷயங்கள்!

* அதிக நகைகள் போட்டுக்கொண்டு பிரயாணம் வேண்டாம்.

* முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம்.

* பெண்களைத் தனியாக ஆட்டோவில் விட்டுவிட்டு, ஆண்கள் இறங்கி பூ, பழம், பிஸ்கெட் வாங்கி வர வேண்டாம்.

* கடையில் பான் பீடா வாங்கிப் போட வேண்டாம். சில பீடாக்கள் மயக்கத்தை உண்டு பண்ணும்.

* ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓரளவு பணம் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய பணம் காணாமல் போனாலும் மற்றவர் களிடம் இருப்பதைக் கொண்டு சமாளிக்கலாம்.

* கொண்டு செல்லும் எல்லாப் பணத்தையும் இரே இடத்தில் வைக்கக் கூடாது. பெட்டியில் கொஞ்சம், கைப்பையில் கொஞ்சம், பாக்கெட்டில் கொஞ்சம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- பிரேமலதா மகாதேவன், பெரியகுளம்.

- கே. சுப்புலக்ஷ்மி, பவானி

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

SCROLL FOR NEXT