தீபம்

சபரிமலை இன்று நடைதிறப்பு: மண்டல பூஜைகள் தொடக்கம்!

கல்கி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பகதர்கள் பம்பையில் புனித நீராட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பகதர்கள் ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் தங்க அனுமதியில்லை. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும். சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புதிய மேல் சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை (நவம்பர் 16) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

-இவ்வாறு சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT