இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் அவர்களின் இலக்குகளை அடையவும் உந்துதலாக அமையும். அதிக ஊதியம் தரும் வேலைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளவோமா?
படித்த படிப்புக்கேற்ற சம்பளம் கிடைக்காமல் பலர் ஏதோ ஒரு வேலையை செய்து வருகின்றனர். இதனால் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவிலேயே அதிக வருமானம் கிடைக்கும் வேலைகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
AI தொடர்ந்து பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம். அனைத்து தொழில்களிலும் செயற்கை நுண்ணறிவின் தேவை இருந்து வருவதால் ஆண்டுக்கு சராசரியாக 10 - 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
டேட்டா விஞ்ஞானிகள் பிசினஸ் மாடலுக்கான மிக நுட்பமான அளவிற்கு டேட்டாக்களை உருவாக்குவது, நுணுக்கமான பல்வேறு விஷயங்களை கண்டுபிடிப்பது, என, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளதால் சம்பளமும் அதிகம் கிடைக்கிறது (ஆண்டுக்கு 10 -15 லட்சம் வரை).
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க டாக்டர்களுக்கான தேவையும் அதிகரிக்கின்றது. மருத்துவத் துறையில் சிறப்பு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக சம்பளம் (ஆண்டுக்கு 20 லட்சம் வரை) கிடைக்கிறது.
கடினமான உழைப்பு தேவைப்படும் இந்த படிப்பை முடித்து சிறந்த பயிற்சியும் பெற்றவர்கள் கை நிறைய சம்பளம் பெறுகிறார்கள். இளைஞர்கள் அதிகம் நுழைய விரும்பும் இந்தத் துறையில் சிஏ முடித்தவர்கள் துவக்கத்திலேயே ஆண்டுக்கு 5 -7 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக இந்தத் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை விமான சர்வீஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால் பைலட், விமான பணிப் பெண்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அனுபவம் பொறுத்து சம்பளம் தரப்படுகின்றது.
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதிக அளவில் வேலை பெறுகின்றனர். ஏனெனில் இவர்களுக்கான தேவை எப்போதும் அதிகம். புரோகிராம் அனலிஸ்ட், புராஜெக்ட் லீட், புரோகிராம் மேனேஜர் என பதவி உயர உயர வருமானமும் அதிகரிக்கும்.
இந்தத் துறை கடந்த 20 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. சினிமா மற்றும் சின்ன திரைகளில் நடிப்பவர்கள் அதிக சம்பளம் பெறுவதுடன் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கும் பேஷன் ஷோ, விளம்பரம், பில்போர்ட் விளம்பரம் என பல்வேறு நிலைகளிலும் நிறைய சம்பளம் கிடைக்கிறது.
சட்டத்துறை பேராசிரியர்கள் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு சட்டத்தை கற்றுத் தரும் வாய்ப்புடன் சிறந்த சம்பளமும் பெற முடியும். அவர்களின் கார்ப்பரேட் சட்டம், சர்வதேச சட்டம், பேச்சுவார்த்தை திறன் போன்ற நிபுணத்துவம் பொறுத்து சம்பளம் கிடைக்கப் பெறுகிறது. அமெரிக்க அதிபர்களாக இருந்த பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா போல் முதலில் சட்டப் பாடங்களை எடுத்துவிட்டு பின்பு பெரிய பொறுப்புகளையும் பதவிகளையும் கூட பெறலாம்.
மேலாண்மை ஆலோசகர்கள் நிறுவனங்களுக்கு வணிக சிக்கல்களை தீர்க்கவும், செயல் திறனை அதிகரிக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறார்கள். நுழைவு நிலை ஆலோசகர்கள் ஆண்டுக்கு 6 -7 லட்சங்களும், அனுபவம் வாய்ந்தவர்கள் 17 -20 லட்சங்கள் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
சிக்கலான நிதி பரிவர்த்தனைகளை கையாளும் பொறுப்பு இந்த முதலீட்டு வங்கியாளர்கள் கையில் தான் உள்ளது. நிதி சேவை துறையில் நிபுணத்துவம், பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூலதனம் திரட்டுதல் மற்றும் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆதரவளிக்கும் முதலீட்டு வல்லுநர்கள். இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு 8 முதல் 15 லட்சம் வரை.