longest living creatures 
கோகுலம் / Gokulam

உலகில் அதிக ஆயுட்காலம் கொண்ட உயிரினங்கள்!

ராதா ரமேஷ்

ஹாய் குட்டீஸ்!

நாம் வாழும் இவ்வுலகில் மனிதர்களைத் தாண்டி பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. மனிதர்களாகிய நம்முடைய ஆயுள் காலம் சராசரியாக 80 முதல் 100 ஆண்டுகள் வரை இருப்பதைப் போல உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மனிதர்களின் ஆயுட்காலத்தை விட அதிகமான வாழ்நாளை பெற்றிருக்கின்றன. அத்தகைய அரிய வகை உயிரினங்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. Ocean quahog clam:

இது வட அட்லாண்டி கடல் பகுதியில் வாழும் ஒரு வகை உப்பு நீர் சிப்பி ஆகும். பொதுவாகவே சிப்பிகள் 100 ஆண்டுகள் வாழும் இயல்புடையவை. ஏனெனில் அவை பெரும்பாலும் மற்ற உயிரினங்களால் வேட்டையாடப்படுவதில்லை. ஐஸ்லாந்து நாட்டில் உள்ள இந்த வகை சிப்பிகளில் சில 507 ஆண்டுகள் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் பகுதிகளில் வாழும் இந்த வகை சிப்பிகள் 400 ஆண்டுகள் வாழும் தன்மை உடையவை.

2. Greenland shark:

ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளில் வாழும் அரியவகை சுறா மீன்கள், கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்று வாழும் இயல்புடையவை. இவை அதிகபட்சமாக 272 ஆண்டுகள் உயிருடன் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. Rougheye Rockfish:

பசிபிக் கடல் பகுதியில் உள்ள கலிபோர்னியா மற்றும் ஜப்பான் நாடுகளில் காணப்படக்கூடிய ஒரு வகை அரிய மீன் இது. ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் காணப்படும் இந்த வகை மீன்கள் அதிகபட்சமாக 205 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக சொல்லப்படுகிறது. சுமார் 7 கிலோ எடையும் 91 செ.மீ நீளமும் கொண்ட இந்த வகை மீன்கள் உணவுக்காக அதிகமாக வேட்டையாடப்படுகின்றன.

4.Red sea urchin:

பசிபிக் கடலில் உள்ள ஆழமான பகுதியில் வாழும் ஒரு வகை சிப்பி இது. பாறைகளில் ஒட்டாமல் நீண்ட நாட்கள் நீந்தி கொண்டே வாழும் இயல்பு கொண்ட இந்த உயிரினத்திற்கு சிறகுகளோ, துடுப்புகளோ கிடையாது. ஆனால் இவை உடலில் உள்ள முட்கள் மூலம் தற்காத்துக் கொள்ளும் இயல்புடையவை. இந்த வகை சிப்பி உயிரினம் சுமார் 200 ஆண்டுகள் வாழ்வதாக கூறப்படுகிறது. இவை அதிகமாக உணவுக்காகவும், இதில் உள்ள கொழுப்பு காகவும் வேட்டையாடப் படுகின்றன.

5. Bowhead whale:

ஆர்டிக் பகுதியில் வாழும் ஒரு வகை திமிங்கலம் இது. சுமார் 20 மீட்டர் நீளம் வரை வளரும். இந்த வகை திமிங்கலங்கள் யானைகளைப் போன்று 7 மடங்கு நீளம் உடையவை. மிகப்பெரிய வாய்ப்பகுதியை கொண்டுள்ள இந்த திமிங்கலங்கள் சுமார் 200 ஆண்டுகள் வாழ்வதாகவும், இதிலேயே சில திமிங்கலங்கள் அரிதாக 268 ஆண்டுகள் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.

6. Giant galapagos tortoise:

ஈக்வடாரில் உள்ள கேலபேகஸ் தீவு பகுதியில் இந்த வகை ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக ஆமைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் இயல்புடையவை. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு 250 ஆண்டுகள் வாழ்ந்த ஆமை ஒன்று இறந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவுப் பகுதியில் வாழும் ஆமைகளும் சுமார் 250 ஆண்டுகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளன.

7. Longfin eel:

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்த வகை மீன்கள் நன்னீரில் மட்டுமே வாழும் இயல்புடையவை. நம் நாட்டில் காணப்படும் விலாங்கு இனத்தைச் சேர்ந்தது இந்த வகை மீன்கள் சிறிய மீன், பூச்சிகளை உணவாக உட்கொண்டு வாழுகின்றன. இந்த வகை மீன்கள் 155 சென்டிமீட்டர் நீளமும், 25 கிலோ எடையும் கொண்டுள்ளன. இந்த வகை மீன்களில் சில அரிதாக 106 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதை தவிர்த்து மற்றவை மீன்கள் 70 முதல் 80 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

8. African elephants:

ஆப்பிரிக்காவில் வாழும் யானைகள் 5 டன் வரை எடை கொண்டதாக உள்ளன. தன் வாழ்நாளில் 7 முறை குட்டிகள் போடும் இந்த யானைகள், காடுகள் பரவலில் முக்கிய பங்கேற்பாளராக உள்ளன. சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் வாழும் இந்த ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன.

என்ன குட்டீஸ், அதிக ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா! இந்த அரிய வகை உயிரினங்களைப் போலவே இறப்பே இல்லாத சில வகை அரிய உயிரினங்களும் உலகில் உள்ளன. Turritopsis dohrni என்று அழைக்கப்படும் ஒரு வகை ஜெல்லி மீனுக்கு இறப்பே இல்லை எனவும் அமெரிக்கா ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

Motivational Quotes: உங்களை மனதளவில் வலிமையாக்கும் 12 மேற்கோள்கள்! 

இரவு உணவுக்குப் பின் செய்யக்கூடாத 6 தவறுகள் தெரியுமா?

செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

SCROLL FOR NEXT