காந்திஜி... 
கல்கி

சீயான் முதல் காந்திஜி வரை... என்ன தொடர்பு?

இரவிசிவன்

சீ - எனும் ஓரெழுத்துச் சொல்லிற்கு தமிழ் மொழியில் 'சீர்' என்று பொருள்
சீ > சீர் - என்றால் சிறப்பு, செல்வம், பெருமை, அழகு, உயர்வு, நன்மதிப்பு.

வணக்கத்துக்குரிய, சிறப்புக்குரிய சொற்களின் முன்பு, அச்சொல்லின் பெருமதிப்பை குறிக்கும் முன்னொட்டாக 'சீ' பயன்படுகிறது.

சீரிய = சிறப்பான (greatness, excellence, eminence).

சீர்மை, சீர்த்த = சிறப்பு (Splender, beauty, graceful ness).

சீர்த்தி = புகழ்.

சீர்த்துழாய் = புனிதமான துளசி.

சீலர் = பெற்றொர், பெரியோர், மூத்தோர், மன்னர், மாண்பு மிகுந்தோர்.

சிறப்பு மிகுந்த காழியூர்- இதன் காரணமாகவே 'சீகாழி' எனப் பெயர் பெற்றது.

சீதனம், சீமந்தம், சீமை, சீவன், சீலன், சீமான், சீமாட்டி, சீம்பால், சீயான்... ஆகிய எண்ணற்ற சொற்கள் இவ்வழி அமைந்தவை.

சீ - என்றால் செல்வம். சீமான் - என்றால் செல்வந்தன் என்று பொருள். சீமான் ஆண்பால், சீமாட்டி - பெண்பால்!

சீயான் (சேயோன்) என்பது சிறப்பு மிக்க, மரியாதைக்குறிய, பெரியோரையும் முப்பாட்டனையும் குறிக்கும்.

சீல் = நேர்,ஒழுங்கு.

சீல் > சீர் = நேர்,ஒழுங்கு, நன்னடை.

சீலம் = உயர்ந்த பண்பு, நேர்படவொழுகும் ஒழுக்கம்.

ஒழுக்கசீலன், சத்தியசீலன், தியாகசீலன், ஜெயசீலன் போன்ற பெயர்களை நோக்குக.

சீ > ஜீ எனத் திரிவதை மக்கள் வழக்கிலும் நம்மால் அதிகம் காணமுடியும்.

சீவன் > ஜீவன், சீயர் > ஜீயர் போன்ற சொற்கள் இப்படி வந்ததே! சீயர்(ஜீயர்) = பெரியோர், வைணவத் துறவி.

சிறப்புகள் வாய்ந்த...சீ என்ற தமிழ்ச்சொல்தான் வடமொழியில் 'ஜீ என்றானது. தமிழ் மொழியில் முன்னொட்டாக இருக்கும் சீ, வடமொழியில் பின்னொட்டாக வழங்கப்படுகிறது. காந்திஜி, ராஜாஜி, நேருஜி - என்று வழங்கப்படும் 'ஜி' என்கிற மரியாதை பின்னொட்டும் 'சீ' என்ற சொல்லின் திரிபே!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சொற்களை உலகிற்கு வழங்கிய நம்மொழியை இனி 'சீத்தமிழ்' என்றும் சொல்லலாமல்லவா?

ஆண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

ஆண்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறைகள்!

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

SCROLL FOR NEXT