மங்கையர் மலர்

கால்சியம், விட்டமின்ஸ் சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரை பொடி!

ஷெண்பகம் பாண்டியன்

முருங்கைகீரையை தினமும் சமையல் செய்து சாப்பிட முடியாது. பொடியாக வைத்துக்கொண்டால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அரை ஸ்பூன் பொடி இரண்டு பிடி கீரைக்கு சமம்.

இரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வளரச்செய்யும்.

கால்சியம், விட்டமின்ஸ், மினரல் சக்தி நிறைந்தது. பார்வை குறைபாடு, மூட்டுவலி, தோல் சுருக்கம் இவற்றிற்க்கு நிவாரணம்.

முருங்கைகீரையை சுத்தப்படுத்தி நிழலில் நன்றாக காய வைக்கவும். கையில் பிடித்தால் நொருங்கும் அளவிற்கு காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம்.

தினமும் பொரியல், குழம்பில் என சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.தோசைமாவில் கலந்து தோசை வார்க்கலாம். பொடிதோசையைப் போல் தூவியும் விடலாம்.

வளரும் குழந்தைகளுக்கு தேவையான சக்தி எளிதாக கிடைத்துவிடும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT