மங்கையர் மலர்

சைத்ய பூமி!

மும்பை மீனலதா

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் - 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மும்பை சிவாஜி பார்க் ஏரியாவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சைத்ய பூமியில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவார்கள்.

இப்போதிலிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆங்காங்கே தண்ணீர், நீர்மோர், அன்னதானப் பந்தல்கள் அமைக்கப் பட்டுள்ளன. தவிர, குளிர் காலமாதலால் கம்பளிப் போர்வை, ஷால் போன்றவைகளும் தானமாகக் கொடுக்கப்படுகிறது.  சமூக நல ஆர்வலர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நினைவிடத்தைப் பற்றியும், அதன் முக்கியத் துவத்தைக் குறித்தும் மக்களுக்குத் தெரியப் படுத்தும் வகையில் ‘சைத்ய பூமி’ எனும் ஆவணப் படமொன்றை இந்திப்பட இயக்குனர் சோமநாத் வாக்மேர இயக்கி யுள்ளார். இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது.

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

வித்தியாசமான சிறுநீரகம் கொண்ட விலங்கு எது தெரியுமா?

லாமினேட் செய்யப்பட்ட மரத்தரை தளத்தின் 7 பயன்கள் தெரியுமா?

கோடைகாலமும், கொரியப் பெண்களின் சரும பராமரிப்பு முறைகளும்! 

கோதுமையை Pregnancy Tester ஆக பயன்படுத்திய பண்டைய எகிப்து பெண்கள்!

SCROLL FOR NEXT