Singapore Turf Club 
செய்திகள்

சிங்கப்பூரில் 180 ஆண்டு கால குதிரைப் பந்தய வரலாறு முடிந்தது!

ராஜமருதவேல்

சிங்கப்பூர் டர்ஃப் கிளப் குதிரைப் பந்தய மைதானத்தில் புதிதாக வீடுகளை கட்டுவதற்காக அதன் நிலத்தினை அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளது. அதற்கு முன் அதன் இறுதி பந்தயநாளை நடத்தியது. சிங்கப்பூரில் 180 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த குதிரைப் பந்தயம் கடந்த அக்டோபர் 5, சனிக்கிழமை அன்று முடிவுக்கு வந்தது.

சிங்கப்பூர் தீவு நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தின் அளவில் தான் உள்ளது. பெருகி வரும் அதன் மக்கள் தொகையை சமாளிக்க போதுமான இடங்களுக்காக புதியதாக பல தீவுகளை உருவாக்குகிறது. கடலில் மணல்களை கொட்டி தனது பரப்பளவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. 60 லட்சம் மக்கள் தொகையை தாண்டிய சிங்கப்பூரில் இட நெருக்கடியும் அதிகம். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரைப் பந்தய மைதானத்தை இடித்து விட்டு கட்டிடங்களை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு போதுமான நிலம் இருப்பதை உறுதி செய்ய இது அவசியம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

குதிரை பந்தயத்தை நிறுத்துவதற்கான முடிவை கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. தொழில் முறை குதிரை ஏற்ற வீரர்கள், பராமரிப்பாளர்கள், பந்தயத்தை சார்ந்து தொழில் செய்ப்பவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்தது. ஆயினும் குதிரைப் பந்தயம் அதற்கு முன்பே வீழ்ச்சியடைந்தது. 2010 ஆம் ஆண்டு சராசரியாக 11,000 ஆக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 2019 இல் சுமார் 6,000 ஆகக் குறைந்தது, அதன் இறுதி நாளில் கூட பத்தாயிரம் பேர் தான் குதிரைப் பந்தயத்த்தை காண வந்திருந்தனர்.

பிரிட்டிஷ் காலணியாக சிங்கப்பூர் இருந்தபோது 1842இல் ஸ்காட்டிஷ் வணிகர் வில்லியம் ஹென்றியால் குதிரை பந்தயம், சிங்கப்பூர் ஸ்போர்ட்டிங் கிளப் மூலம் உருவாக்கப்பட்டது. ​​அதன் முதல் போட்டி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு ஃபாரர் சாலையில் நடத்தப்பட்டது. பின்னர் கிளப் பெயர் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் என்று பெயர் மாற்றப்பட்டது. புதிய பந்தய பாதை 1933 இல் திறக்கப்பட்டு 1999 வரை கிளப்பின் தலைமையகமாக இருந்தது, சில நேரங்களில் அது மற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பின் அரங்கம் $500 மில்லியன் செலவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டது, குளிரூட்டப்பட்ட அறைகள், இரவுப் பந்தயங்களுக்கான ஃப்ளட்லைட் மற்றும் 30,000 பார்வையாளர்களை அமரும் வசதி கொண்ட பிரமாண்டமான அரங்கமாக இருந்தது. இது உலக குதிரை பந்தய அரங்கில் முதன்மையாக இருந்தது.

சனிக்கிழமை இறுதி பந்தயத்ததைக் காண அதன் நீண்ட கால ரசிகர்கள் வந்திருந்தனர். வீட்டு வசதிக்காக சிங்கப்பூர் அரசு குதிரைப் பந்தய மைதானம் மட்டும் இல்லாமல் கோல்ஃப் கிளப் ஒன்றையும் மூடியுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

SCROLL FOR NEXT