செய்திகள்

216 – அடி உயரத்தில் ஶ்ரீராமானுஜர் சிலை: ஐதராபாத்தில் பிரதமர் மோடி பிப்ரவரி 5-ல் திறந்து வைப்பு!

கல்கி

தமிழகத்தில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ குருவன ஶ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை (Statue of Equality) என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, ஐதராபாத்திலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து இந்த சிலை நிர்வாக குழு தெரிவித்ததாவது;

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஶ்ரீராமானுஜர், தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வைணவ குரு ஆவார். அவரது உருவச் சிலையை 215 அடி உயரத்தில் ஐம்பொன் உலோகத்தால் உருவாக்கத் திட்டமிட்டோம். அதன்படி தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களை பயன்படுத்தி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் கடந்த 2014-இல் நாட்டப்பட்டது. மேலக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் சிற்பங்களை மாதிரியாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது..

அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT