தமிழகத்தில் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருத்துகளுக்கு தடை விதித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் விதமாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 60 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்தது.
அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மஞ்சள் பாஸ்பரஸ் (3%) அதிகம் உள்ள ரடோல் எனப்படும் எலி மருந்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.