பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை 
செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு!

கல்கி டெஸ்க்

பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் தமிழக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.

முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பப் பட்டது. அது குறித்து பதிலளித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை வாட்ச் குறித்த ஆவணங்களோடு திமுக அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த தகவல்களையும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் படி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் அதிக சொத்துக்கள் குவித்துள்ளதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டிருந்தார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏராளமான தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் நேரடி ஒளிபரப்பினை செய்திருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக போது பணம் பரிமாற்றம் நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்து இருந்தார் என சொல்லப்படுகிறது.

எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டதாக கூறி அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு தலைமை வழக்கறிஞர் தேவராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

SCROLL FOR NEXT